வியாழன், ஏப்ரல் 16, 2015

உன் விருப்பம்

உன் கோபமெல்லாம் சரிதான்
உனக்கும் எனக்கும் இனி எதுவும் இல்லைதான்

ஆனால்
ஒன்று மட்டும் சொல்லி விடுகிறேன்
இனியொரு முறை எங்காவது சந்திக்க நேர்ந்தால்
முறைத்து விட்டுப் போ
அல்லது
விறைத்துக் கொண்டு
வேறு பக்கம் வேண்டுமானாலும் திரும்பிக் கொண்டு போ

பழைய உறவுக்காகவும்
பழகிய பாவத்துக்காகவும்
சிரித்து மட்டும் தொலைத்து விடாதே

அந்தச் சிரிப்புதானே
என்னைச் சிதறடித்த உன் முதல் ஆயுதம்

உடைத்து நொறுக்கி என்னை உருக்குலைய வைப்பதுதான்
உன் விருப்பம் என்றால்
உன் விருப்பம் போல்
என்ன வேண்டுமானாலும் செய்து கொள்

அதன்பின்
எனக்குப் பதில் சொல்லும் கடமையில் இருந்து நீ தப்பித்தாலும்
உன் மனசாட்சி எனக்குத்தான் ஆதரவளிக்கும்
அதற்குப் பதிலளிக்கும் அளவுக்காவது
உன்னைத் தயார் செய்து கொண்டு
எதுவும் செய்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...