இடுகைகள்

December, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விவாதக்கார இந்தியர் (THE ARGUMENTATIVE INDIAN)

படம்
ஆசிரியரின் பெயராலும் நூலின் தலைப்பாலும் ஈர்க்கப் பட்டு, சில வருடங்களுக்கு முன்பே டாக்டர். அமர்த்யா சென் அவர்களின் 'THE ARGUMENTATIVE INDIAN' (விவாதக்கார இந்தியர்) நூலை வாங்கி விட்டேன். நோபல் பரிசு கொடுத்துச் சிறப்பிக்கப் பட்ட போது, அவருடைய பெயர் கொண்ட கட்டுரைத் தலைப்புகளில் (தலைப்புகளை மட்டுமே) திரும்பத் திரும்பப் படித்தது போக அவரைப் பற்றி அறிந்து கொள்ள வேறு வாய்ப்பேதும் இருக்கவில்லை. கடைசியில், ஒரு வழியாக இந்தப் புத்தகத்தைப் படித்து விடும் நோக்கத்தோடு அலமாரியில் இருந்து தட்டி எழுப்பி விட்டேன். இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இப்போதுதான் IMAGINING INDIA (இந்தியாவைக் கற்பனைத்தல்) படித்து முடித்தேன். நந்தனின் கற்பனைத்தலுக்கு முன்பு இதைப் படித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன் இப்போது. நந்தனை விட அதிகமான நேரம் வரலாற்றில் கழித்திருக்கிறார் சென். சர்ச்சைக்குரிய பிரச்சனைகளைக் கூடுதல் வலிமையோடும் வெளிப்படையாகவும் கையாண்டிருக்கிறார். உபயம் - அவருடைய வங்காளப் பின்னணி.
நூலை வாங்கியபோது நினைத்தேன் - உருப்படியாக எதுவும் செய்யாமல் பேசிப் பேசி நேரத்தை வீணடிப்பவர்கள் என்று …