இடுகைகள்

மே, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சோளகர் தொட்டி

சோளகர் தொட்டி தமிழின் தலைசிறந்த புதினங்களில் ஒன்றாகக் கருதப்படுவது. நன்கு அறியப்பட்ட எழுத்தாளர்களின் புதினங்களைப் போல பெரிதும் பேசப்படாத நூல் என்பதால் எப்படி இருக்குமோ என்கிற சந்தேகத்தோடே தொடங்கினேன். தொடங்கிய சில அத்தியாயங்களிலேயே இந்தப் புதினத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு கூடியது. புதினத்தின் பாதியை நெருங்குவதற்குள் இதுதான் தமிழில் இதுவரை வெளிவந்த புதினங்களிலேயே சிறந்ததோ என்ற சந்தேகம் உருவாகி, முடிக்கும் போது இதுவரை நான் படித்த புதினங்களில் இதுதான் சிறந்தது என்று உறுதியாகப்பட்டது. ஜெயகாந்தன், ஜானகிராமன், கி. ரா. போன்ற பெரும் எழுத்தாளுமைகளின் புதினங்களோடு ஒப்பிடுகையில் இதில் புதினங்களுக்கென்று சொல்லப்படும் இலக்கணமோ அவ்விலக்கணத்தின்படியான அழகியலோ இலக்கிய மதிப்போ இல்லை என்று கூட வாதிடப்படலாம். இலக்கியத்திற்கென்று கறாரான இலக்கணங்கள் வைத்திருக்கும் சிலர், இந்தப் புதினத்தை இலக்கியமே இல்லை என்று முழுமையாக நிராகரிக்கவும் கூடும். நடந்ததை அப்படியே பதிவு செய்வதில் எங்கே இலக்கியச் சுவை இருக்கிறது எனக் கூடும். ஆனால் எனக்குப் படிக்கத் தொடங்கியதில் இருந்து, படித்து முடித்து விட்ட பின்பும் பல