இடுகைகள்

ஜூன், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கலாச்சார வியப்புகள்: சிங்கபுரம் (சிங்கப்பூர்)

படம்
கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! அந்தக் காலத்தில் பயணக் கட்டுரைகள் எழுதுவது பலருக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும். அப்போது வெளிநாடு சென்றோரும் குடும்பத்தைக் காப்பாற்றும் பொருட்டு வாழ்க்கை முழுமையையும் அந்நாடுகளில் பணி செய்வதிலேயே அர்ப்பணித்தார்கள். அதனால் அவர்களுக்குப் பயணம் பற்றிய அனுபவங்களை எழுதும் வாய்ப்பெல்லாம் கிட்டியிராது. பெரும்பாலும் அப்போது கூலி வேலைக்குப் போன நம் மக்கள்தாம் - அவர்களுடைய சந்ததியர்தாம் இன்று பல நாடுகளில் நல்ல நிலையில் இருக்கிறார்கள். சுற்றிப் பார்க்கப் போவோர் மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் இருந்திருப்பர். அப்படிப் போனவர்களையும

நடு நிலைமை

படம்
இன்றைக்கு அரசியலிலும் சரி, அது சார்ந்த பொது வாழ்விலும் சரி, அடிப்படை அறிவு படைத்த எந்த மனிதனாலும் ஏற்றுக் கொள்ள முடியாத மாதிரியான எத்தனையோ கருத்துக்களை கூச்சமில்லாமல் உரக்கப் பேசுகிறார்கள் பலர். அதற்கான ஒரே காரணம். கூட்டிக் கழித்து அதில் எனக்கென்ன இருக்கிறது என்று பார்க்கும் வியாபார மனப்பான்மை. வியாபாரத்தைக் கூட நிறைய நேர்மை உணர்ச்சியோடு செய்கிறார்கள் சிலர் இந்தக் காலத்தில். தன்னுடைய சுயநலம் மற்றும் தன்னைப் போன்றே சுயநலம் கொண்டோருடைய ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை இந்த இரண்டும்தான் அத்தகைய மனோபாவத்தை நீரூற்றி வளர்த்துக் கொண்டு இருக்கிறது. நடு நிலைமை காப்பது எவ்வளவு முக்கியம் என்பதில் நம்பிக்கையின்மையே அதன் மூல காரணம். "அரசியல் என்றால் ஒருவரை ஆதரித்து இன்னொருவரை எதிர்ப்பதுதான் இயற்கை. அரசியலில் நடு நிலைக்கு இடம் இல்லை." என்று அரசியல் மேதாவி சோ ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். அது அவர் வாழ்க்கை முறையைச் சரியாகவே நமக்குப் படம் போட்டுக் காட்டுகிறது. அப்படித்தான் அவர் ஒவ்வொரு தேர்தலிலும் செயல் படுகிறார். ஒரே ஒரு முறை தவிர்த்து ஜெயலலிதா அரசியலுக்கு வந்த பின்பு அவரையே எல

பிஞ்சுக் கனவு

படம்
அஞ்சாம் வகுப்பில் ஆசிரியர் கேட்டார் பின்னாளில்  என்னவாக ஆசை என்று பெரியவனாகையில் அணுகுண்டும் ராக்கெட்டும் செய்யும் அறிவியல் மேதையாக வேண்டுமென்றேன் அஞ்சாம் வகுப்பின் அந்தப் பிஞ்சுக் கனவு இப்போது பக்கத்துத் தெருவிலிருக்கும் பட்டாசுத் தொழிற்சாலையில்தான் நனவாகியிருக்கிறது அடித்துச் சேர்த்து விட்டு வந்த அப்பன் சொல்கிறான் இப்போது -  யார் போட்ட கண்ணோ?! ஒளிந்திருக்கும் சாமிகளே உங்களிடமொன்று கேட்கிறேன்... கனவுகளையுமா கண்ணு போடுவார்கள்?! பெரியோர் நலம் பேணும் சரியோரே இப்போது சொல்லுங்கள்... குழந்தைத் தொழிலாளர்  குவிந்திருக்கும் ஒரு தேசத்தில் முதியோர் இல்லங்கள் மட்டும் எப்படி முற்றிலும் தப்பாகும்?! * 1998 நாட்குறிப்பில் இருந்து...

எது தவறு?

படம்
தரங்கெட்ட அரசியல் தவறா? அதைச் சாடும் தரங்கெட்ட பேச்சு தவறா? மேடை நாகரீகம் பற்றிப்  பாடம் நடத்துவோரே! வாழ்க்கை நாகரீகத்தை விடவா மேடை நாகரீகமும்  ஆடை நாகரீகமும்  முக்கியமாகி விட்டன நமக்கு?!  பொது வாழ்க்கையில் தரம் பற்றிக் கேட்டால் சமரசம் சகஜம் என்கிறீர் பேச்சில் மட்டும்  அது பேண வேண்டும் என்கிறீர் செய்வதை விடவா வைவது தவறு? செய்வோரை விடவா வைவோர் கெட்டவர்? சாக்கடையில் பன்றிகள் நாறிய காலம் போய் சாக்கடையையே பன்றிகள் நாறடிக்கும் காலத்தில் பன்றியாய் வாழ்வதை விடவா அவற்றை பன்றிகள் என்று  அழைப்பது குற்றமாகும்? பின் குறிப்பு: ஒருவேளை இதைப் படிக்க நேர்ந்தால் பன்றிகள் வருத்தப் படலாம். இவர்களை விடவா நாம் கேவலம் ஆகிவிட்டோம் என்று. அப்படி ஏதேனும் நிகழ்ந்தால் அவர்களுக்கு இப்போதே என் மன்னிப்பைச் சொல்லி விடுகிறேன் - உங்கள் மனதைப் புண் படுத்துவதல்ல என் நோக்கம். உங்களை விடத் தம்மைப் பெரிதாக நினைக்கும் எங்களில் சிலருக்கு அது உண்மையில்லை என்று உணர்த்த எடுத்துக் கொண்ட ஓர் அவசர ஒப்பீடே. தயவு செய்து இந்த ஒரு முறை மன்னித்து விடுங்கள். அதற்குப் பதிலீடாக பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு படித்த -