வியாழன், ஏப்ரல் 16, 2015

உன் விருப்பம்

உன் கோபமெல்லாம் சரிதான்
உனக்கும் எனக்கும் இனி எதுவும் இல்லைதான்

ஆனால்
ஒன்று மட்டும் சொல்லி விடுகிறேன்
இனியொரு முறை எங்காவது சந்திக்க நேர்ந்தால்
முறைத்து விட்டுப் போ
அல்லது
விறைத்துக் கொண்டு
வேறு பக்கம் வேண்டுமானாலும் திரும்பிக் கொண்டு போ

பழைய உறவுக்காகவும்
பழகிய பாவத்துக்காகவும்
சிரித்து மட்டும் தொலைத்து விடாதே

அந்தச் சிரிப்புதானே
என்னைச் சிதறடித்த உன் முதல் ஆயுதம்

உடைத்து நொறுக்கி என்னை உருக்குலைய வைப்பதுதான்
உன் விருப்பம் என்றால்
உன் விருப்பம் போல்
என்ன வேண்டுமானாலும் செய்து கொள்

அதன்பின்
எனக்குப் பதில் சொல்லும் கடமையில் இருந்து நீ தப்பித்தாலும்
உன் மனசாட்சி எனக்குத்தான் ஆதரவளிக்கும்
அதற்குப் பதிலளிக்கும் அளவுக்காவது
உன்னைத் தயார் செய்து கொண்டு
எதுவும் செய்!

செவ்வாய், ஏப்ரல் 14, 2015

திங்கள், ஏப்ரல் 13, 2015

அறிந்தும் அறியாமலும்

நிறையப் படிப்பதால்
நிறைய அறிவைக் குடிப்பதால்
நீர்
நீரற்ற வெற்றுச் சுரைக்காய் எம்மை விட
அறிவாளியாகத்தான் இருக்க வேண்டுமென்று படுகிறது

ஆனால்
மீண்டும் மீண்டும்
ஒரே மாதிரியான
உம் மீது திட்டமிட்டுத் திணிக்கப்படும்
பிரச்சார எழுத்துக்களை மட்டும் உள்வாங்கிக் கொண்டு
உம் சுவர்களுக்கு வெளியே இருக்கும்
உலகையே இல்லையென்று
வாதிடுகையில்
வாதிட மறுக்கையில்

அறியாமையை அறிந்திருக்கும் நிலையே
அறிந்தும் அறிய மறுக்கும் நிலையினும் மேலென்று
அறிவித்து விடுகிறீர்!

சனி, ஏப்ரல் 11, 2015

சிங்கங்களே!

பச்சைத் தமிழ்ச் சிங்கங்களே
வந்தேறித் திராவிடர்களை வதம் செய்து விட்டு வாருங்கள்
உம்மை உசுப்பி விட்ட வேலையைச் செய்து
ஒரு நூற்றாண்டு காலம் எம்மையும் இம்சித்ததால்
எமக்கும் எதிரிகளே அவர்கள்

உங்கள் வேட்டை
இன்னும் ஒரு நூறாண்டுகளாவது நடக்க வேண்டியதிருக்கும்
முடித்துவிட்டுச் சொல்லுங்கள் சிங்கங்களே

உங்களை
உள்ளுக்குள்ளேயே அடித்துக் கொண்டு சாகும் நாய்களாக்கி
நடுத் தெருவில் விட்டு வேடிக்கை பார்க்க
எம் பிள்ளைகளை அனுப்பி வைக்கிறோம்

எமக்குத் தெரியும்
உங்கள் சண்டைகளில் தலையிடும் உரிமை
எமக்கோ எம் பிள்ளைகளுக்கோ இல்லை என்பது
அதனால் வெறும் வேடிக்கைதான் பார்ப்போம் சிங்கங்களே
நீங்கள் விரைந்து நடத்துங்கள்

புதன், ஏப்ரல் 08, 2015

நாய்த்தனம்

எனக்கு நாய்களைக் கண்டால் அலாதி பயம்
நாய்த்தனம் நமக்கு ஒத்துவராதப்பா...

அவற்றுக்கோ நம்மைக் கண்டால் அலாதி இன்பம்
அந்த பயம் இருக்கட்டும் மானிடா...
உன் போன்று பயந்து ஒதுங்குவோர் மட்டும் இல்லையென்றால்
எம் போன்ற நாய்களுக்கு உம் சமூகத்தில் மரியாதையே இல்லாமல் போயிருக்கும்!

ஞாயிறு, ஏப்ரல் 05, 2015

என்ன கருமமடா இது?

இந்தக் கொடுமையான உணர்வின் பெயர்தான் என்ன?

உன் தெருவுக்குள் நுழைகிற போதெல்லாம்
உடல் நடுங்குகிறதே எதற்காக?

உன் மூஞ்சியில் முழித்துவிடக் கூடாது என்று 
உதறித் துடிக்கும் அதே வேளையில்
உள்ளுக்குள் இன்னோர் ஆசை
உன் முகத்தைக் கண்டுவிட முடியாதா என்றும்
ஏங்கித் தொலைக்கிறதே

உன்னைக் காணாமல் கடந்து விட்ட பின்பு
பிடிபடாமல் தப்பிய திருடனைப் போன்ற பெருமூச்சும்
பார்த்துத்தான் தொலைந்திருக்கலாமே என்றொரு தோல்வியுணர்வும் 
ஒருங்கே வதைக்கும் 
இந்தக் கொடுமையான நோய்க்குத்தான் பெயர் என்ன?

நோம் சோம்ஸ்கி: கொரோனாக்கிருமி - இடரில் இருப்பது என்ன? | DiEM25 தொலைக்காட்சி | ஸ்ரெச்கோ ஹோர்வத்

Noam Chomsky: Coronavirus - What is at stake? | DiEM25 TV | Srećko Horvat ஸ்ரெச்கோ ஹோர்வத்: மற்றுமொரு ‘கொரோனாக்கிருமிக்குப் பிந்தைய உலகம்’ ந...