இடுகைகள்

கவிதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செயற்கை நுண்ணறிவு

பல நாட்களாக புலி வருது புலி வருது கூச்சல் மட்டுமே வந்தது புலி வந்த பாடில்லை கூச்சல் ஓய்ந்து புலி வருதாம் புலி என்று சிரித்து மறந்திருந்த வேளையில் வந்தே விட்டது புலி சிலர் புலிக்குக் கறியானோம் சிலர் புலிக்கறி பிரியாணி உண்போர் ஆனோம் Wrote for the world's first Tamil AI panel discussion that took place in Dublin, CA, USA on March 9th, 2025.

கப்சிப்

ஒரே கேள்விதான்  கப்சிப்  அப்படியே வாயடைச்சுப் போயிட்டான்  அப்படி வச்சுக்கணும்  த்தூ... இதெல்லாம் ஒரு மனுசப் பிறவி  இதுகிட்டல்லாம் மனுசன் பேச முடியுமா?

பெப்பே

பெருங்கிறுக்கெல்லாம் பேரறிஞர் பேரறிஞரெல்லாம் பெருங்கிறுக்கு

குருதி காணா நிலம்

நான்கில் ஒரு பங்கே நிலம்  அதில் மனிதன் புகா நிலம் எவ்வளவு? மனிதன் புகுந்து குருதி காணா நிலம் எது? அவற்றில் மிகப்பெரும் நிலப்பரப்பு எது? அங்கு சென்று வாழ வேண்டும் 

பருவம்

ஒவ்வொரு கலியாணம் காதுகுத்து சாவுக்கும் அருள்மொழி கோதை வேல்முருகன் எல்லோரும் வந்து சேர்வார்கள் நாங்கள் பாட்டுக்கு விளையாடிக்கொண்டிருப்போம் அம்மா அப்பாக்களுக்கு மட்டும் ஆயிரமாயிரம் பிரச்சனைகள் இருக்கும் இப்போதும் கலியாணத்தில் காதுகுத்தில் சாவுகளில் சந்தித்துக்கொண்டுதானிருக்கிறோம் விளையாட வேண்டும் என்றெல்லாம் ஆசையில்லை நாங்கள் பாட்டுக்கு இருக்க முடிந்தால் போதும் ஒவ்வொருத்தருக்கும் எவ்வளவு பாடுகள்

அறிவியலில் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வோம்

ஈரோட்டு மகாகவிக்கு எட்டயபுரத்துப் பெருங்கவியின் பெயர் தாங்கிய  சிறுவன் என் பெருவணக்கம்  சிறுவன்? உங்கள் செய்திகளையும் கவிதைகளையும்  தொலைக்காட்சியாய்க் கண்டு கேட்டு வளர்ந்த  எழுபது-எண்பதுகளின் பிள்ளைகளில் ஒருவன் நான்  எனவே  இன்று உங்கள் முன்  மீண்டும் சிறுவனாகிறேன்  நேரச் சிக்கல் மதித்து  ஏனையோர் எல்லோருக்குமாகச் சேர்த்து  மொத்தமாக ஓர் ஊத்தப்ப வணக்கம்! அறிவியலில் தமிழ் முழக்கம்  கண்டிப்பா வேணுமா? இன்று அறிஞர் வயப்பட்டிருக்கும் அறிவியலை  அன்றே மக்கள்மயப்படுத்தியிருந்த... ஆமைகளும் காகைகளும் கொண்டு  ஆழியில் திசை கண்டு ஆண்ட  ஆதி இனம் என்னும் அகந்தையா? உலகம் தட்டையெனும் மட்டைகளுக்கு மத்தியில்  நாண்மீன் கோள்மீன் என்றும்  கோள்மீன் சூழ்ந்த இளங் கதிர் ஞாயிறென்றும்  செஞ்ஞா யிற்றுச் செலவும் அஞ் ஞாயிற்றுப் பரிப்பும் என்றும்  ஈராயிரமாண்டு முன்பே வானியல் பாடிய இறுமாப்பா? மறுப்பது சாவை மருந்தென லாமே என்று  அதற்கும் முன்பே அறிவித்துச் சென்ற  மந்திர மூலரின் மக்கள் நாமென்ற ‘சித்த’ச் செருக்கா? மந்திர மூலரின்...

அண்டம்

நான் உள்வாங்காத காற்றை வெளியிட்டவர் நான் வெளியிட்ட காற்றை உள்வாங்காதவர் வந்து விளக்கினால் விளங்கிக்கொள்வேன் இந்தப் பேரண்டத்தின் அமைப்பை

வாய்மையிடத்து

அவனுக்கு நிலவாக  பூவாக  போதையாக  இருந்தவள்  இவனுக்கு  பெண்ணாக மட்டுமே  தெரிகிறாள் 

தாய்

படும் பாட்டையெல்லாம் அவளோடு பகிர்ந்துகொள்வதால் பயனென்ன இருக்கப் போகிறது? அவள் கவலையும் பெருகுவதன்றி படும் பாடெல்லாம் அவளுக்குத் தெரியவே தெரியாதே என்றாவது ஒரு நாள் எல்லாத்தையும்  அவளிடம் சொல்லி அழுது தீர்க்க வேண்டும் அவள் அழுது தீர்த்த பின்தான்  சுமை குறையும்

அருமை

கண்ணைக் கட்டிக் காட்டில் விடப்பட்டிருந்த வேளைகளில்  வாட்டி வதக்கிய வெயிலை மறக்கவே முடியவில்லை  ஆங்காங்கே இளைப்பாறக் கிட்டிய நிழல்களையும் நிலத்தில் கால் படாது  தேருலா சென்ற பொழுதுகளில் எப்போதேனும்  சுரீரென்று மூஞ்சியில் சுட்டிருக்கத்தானே செய்யும்  அது மட்டும் எப்படி நிழலாகத் தொடரவில்லை!

மாலை மாற்று - அன்னா அகானா (லைஸெல் மல்லர்-ஐத் தழுவி…)

மாலை மாற்று - அன்னா அகானா (லைஸெல் மல்லர்-ஐத் தழுவி…) அவளின் கடைசி மூச்சு அவள் நுரையீரலை நிறைக்கிறது பொம்மைப் பேழைக்கு மேலே கால்கள் மிதக்கின்றன சிவப்புச் சீலை அவள் கழுத்திலிருந்து அவிழ்கின்றது கொரியப் பாப் பாடல் திரும்பத் திரும்பத் திருப்பி ஒலிக்கிறது கண்ணீர் தவழ்ந்து மேலேறி அவள் கண்ணுக்குள் நுழைகின்றன துயரம் குருடாக்கும் கோபமாக மடிப்பவிழ்த்துக்கொள்கிறது காகிதத்தின் கறைபடிந்த எழுத்துக்கள் கண்ணுக்குள் வருகின்றன அந்த எண்ணம் அவள் மனதை நீங்குகிறது கதவுகள் படார் படாரென்று திறக்கின்றன சொற்கள் வாய் பிளந்து உள்நுழைந்து பற்றியெரியும் வயிற்றுக்குள் அடங்குகின்றன என்னுடன் அவளுடைய கடைசிச் சண்டையைப் போட்டுக்கொண்டிருக்கிறாள் அது எனக்கு இன்னும் தெரியாது நான் உன்னை வெறுக்கிறேன், படாரென்று வாய் திறந்து உள்ளே போய்விடுகிறது அவள் தட்டிவிட்ட கைவினை இளஞ்சிவப்பு வாலெண்டைன் அட்டை தரையிலிருந்து தாவி மேசை மேல் இடம் கொள்கிறது யாருக்குமே புரியல யாருக்குமே தெரியல யாருமே காது கொடுக்கிறதில்ல யாருக்குமே அக்கறையில்ல யாருக்குமே என்னைப் பிடிக்கல நான் நாதியற்றவள் என்று கக்கியவற்றை விழுங்கிக்கொண்டு விரைந்து பின்செல்கிறாள் அ...

நாய்கள்

மனிதரில் சிலருக்கு நாய்கள் என்றால் பயம் எனவே நாய்களில் சிலவற்றுக்கு மனிதர்களைக் கண்டால் இளக்காரம்

அடுத்து...

எல்லாம் முடிந்த பின்பு என்ன நடக்கும்? மண்ணின் மைந்தர்கள் எல்லோரும் கூடி கொரோனுவுக்கு ஒரு பாராட்டு விழா எடுக்கலாம் மில்லியன் வருடங்களாகத் தம் மண்ணையும் மற்ற குடியினங்களையும் மனச்சாட்சியில்லாமல் அழித்தொழித்த அரக்கர்களை இதுவரை எது எதுவோ யார் யாரோவெல்லாம் அழிக்க முயன்று முடியாமல் போய் அவர்களுக்குள்ளாகவே அடித்துக்கொண்டு சாவார்களென்றும் ஆசைப்பட்டுக் காத்திருந்து அதுவும் நடக்காமல் போய் இந்தக் கொடுமைக்கெல்லாம் ஒரு முடிவே இல்லையா கடவுளே என்று எல்லோரும் வெதும்பிக் கிடந்த வேளையில் வாராது வந்த மாமணியாய் வந்திறங்கி அழித்தொழித்த கிருமியாருக்கு அது கூடச் செய்யவில்லையென்றால் எப்படி? சிலர் செய்த சேட்டைகளுக்கு பிஞ்சுக் குழந்தைகள் உட்பட அவர்களில் எல்லோரையும் கொன்று குவித்தது எப்படிச் சரியாகும் என்று அவர்களின் ஐ. நா. மன்றத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டு போர்க் குற்றங்கள் மீதான நேர்மையான விசாரணை ஒன்று நடந்தேறலாம் வெறுப்பு தலைக்கேறி கிருமிகளுக்குரிய அடிப்படை அறங்கூட இல்லாமல் இப்படி மனிதத்தனமாக நடந்துகொண்டுவிட்டோமே என்று அவர்களில் பலர் போருக்குப் பிந்தைய மன உளைச்சலில் தற்கொலை ...

தேர்தல் செருப்புகள்

பிய்ந்த செருப்புகளை அவசரப்பட்டுக் குப்பையில் வீசிவிடாதீர்கள் மக்களே! தேர்தல் வந்துகொண்டிருக்கிறது!

அற்புதமது

எல்லோரும் அதை அருமை அற்புதம் என்றார்கள் அதை பார்த்திராதவர்கள் அனுபவித்திராதவர்கள் பாவம் செய்திருக்க வேண்டும் சபிக்கப்பட்டவர்களாயிருக்கக் கூடும் என்றார்கள் அப்படித்தான் இருக்குமோ என்றஞ்சி அதைப் பொய்ப்பிக்க விரும்பி நானும் சென்று பார்த்தேன் அனுபவித்தேன் அப்படியொன்றும் அருமையும் அற்புதமும் அதில் இருப்பது போலப் படவில்லை எனக்கு ஆனாலும் பார்க்காததற்கே பாவம் செய்திருக்க வேண்டும் சபிக்கப்பட்டிருக்கக் கூடும் என்றவர்கள் பார்த்துவிட்டு அருமை மறுத்தால் என்னவெல்லாம் சொல்வார்களோ அதற்குப் பின்னே ஆமாம் அருமைதான் அற்புதந்தான் என்று மாற்றிச் சொல்வதற்குப் பதில் இப்போதே சொல்லிவிடலாம் ஆகா! என்னே அருமை அது! அற்புதமது!!

தாயுள்ளம்

ஒரு கொலைகாரனை கோபக்காரன் திமிர் பிடித்தவன் பொறுப்பற்றவன் சோம்பேறி என்று மற்ற எல்லாக் குறைகளையும் மட்டும் சொல்லித் திட்ட பெரும் தாயுள்ளம் வேண்டும்

நாயே

எவரையும் எளிதில் நாய் என்றிடுகிறீர்கள் நன்றியுடைமை நக்குதல் குரைத்தல் கடித்துக் குதறுதல் இடமறிந்து வாலாட்டுதல் இவை தவிர நாய்கள் பற்றி வேறேதும் இல்லையென்று எ...

அன்பு

நீ மிதமிஞ்சிச் செலுத்திய நஞ்செல்லாம் என் பாதி உயிரைக் குடித்தபின்தான் உணர்த்தின அவை யாவும் அளவுக்கு மீறிய அமிர்தத்தின் மறு வடிவம் என்று

திருடர் நீதி

எல்லோரும் திருடர்கள்தாம் அதற்காக... என்னை வாழவைக்கும் திருடன் என்னைக் கேள்வி கேட்கும் திருடன் பேசாமல் தானுண்டு தன் திருட்டுண்டு என்றிருக்கும் திருடன் எல்லோரும...

தலைவன்

அகநானூற்றுத் தலைவன் உனக்காக உயிரையே கொடுப்பேன் என்றான் கேள்வி கேட்காமல் தன்னையே கொடுத்து ஏமாந்தாள் தலைவி வீட்டைவிட்டு வெளியே வந்ததும் அகமொன்று வைத்துப் புறமொன்று பேசாத புறநானூற்றுத் தலைவன் இங்கும் அதே போல் உனக்காக உயிரையே கொடுப்பேன் என்றான் கேள்வி கேட்காமல் மண்ணைக் கொடுத்து ஏமாந்தான் தொண்டன் கொடுப்பேன் என்று சொல்லாமல் கொடுத்தவர் என்றோ ஒருநாள் புரட்டப்படும் வரலாறானார் கொடுப்பேன் என்று சொல்ல மட்டும் செய்தவர் வரலாற்றையும் மாற்றி எழுதவல்ல தலைவரானார்