இடுகைகள்

டிசம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஐ. நா. ஆட்சி மற்றும் அலுவல் மொழிகள்

உலகில் மொத்தம் 6500 மொழிகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவற்றில் பெரிதளவில் பேசப்படும் மொழிகள் (பெரிய மொழிகள் என்று வைத்துக்கொள்வோம்) அனைத்தும் மொத்தமாக 11 மொழிக் குடும்பங்களுக்குள் அடைக்கப்படுகின்றன. அவற்றுள் இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பமே மிகப் பெரியது. உலக அளவில் அதிகமாகப் பேசப்படும் மொழி என்றால் முதலில் ஆங்கிலம் வருகிறது. அடுத்ததாக மாண்டரின், இந்தி ஆகியவை வருகின்றன. ஆங்கிலத்துக்கும் இந்திக்கும் மற்றவர்களும் பேசுவதால் இந்த இடம். தாய்மொழி என்ற கணக்குப்படி பார்த்தால், முதலில் மாண்டரினும் அடுத்து ஸ்பானியமும் வருகின்றன. அதன் பின்னரே ஆங்கிலமும் இந்தியும். இது ஒரு புறம் இருக்க, உலக நாடுகளையெல்லாம் ஒன்றிணைக்கும் ஐக்கிய நாடுகள் (ஐநா) மன்றம் தன் ஆட்சி (official) மற்றும் அலுவல் (working) மொழிகள் என்று சிலவற்றை அறிவித்திருக்கிறது. அதில் தம் மொழியையும் புகுத்திவிட வேண்டும் என்று எல்லா நாடுகளும் அவர்களால் முடிந்த வேலைகளைச் செய்துகொண்டேதான் இருக்கிறார்கள். ஆனாலும் ஐநா சில அடிப்படைகளின் அடிப்படையிலேயே இம்மொழிகளைத் தேர்ந்தெடுத்துள்ளது. அம்மொழிகள் யாவை? அவ்வடிப்படைகள் யாவை? மொழிகள்: 1. அரேபியம் 2.

நாய்கள்

மனிதரில் சிலருக்கு நாய்கள் என்றால் பயம் எனவே நாய்களில் சிலவற்றுக்கு மனிதர்களைக் கண்டால் இளக்காரம்