இடுகைகள்

மார்ச், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நம்பிக்கைதான் நண்பா!

தோழா இதுவரை நான் இழுத்த இழுப்புக்கெல்லாம் நீ வந்ததற்கு நன்றி நீ இழுத்த இழுப்புக்கெல்லாம்  நான் வந்ததும் உண்மைதான் தவறுதான் அதற்கொரு வெறும் மன்னிப்பு விடையாகாதுதான் ஆனால் இனியும் தொடர்ந்து இழுபட என்னால் முடியாது அதற்கான தெம்பும் திராணியும் என்னிடம் இல்லை எனக்கென்றொரு வாழ்க்கை வட்டம் பயணம் இருக்கிறது அதில் அதற்குள் என்னோடு நீ வரமுடியாதது எனக்கும் வருத்தந்தான் உனக்கென்றிருக்கிற வாழ்க்கை வட்டம் பயணம் பற்றி எனக்கும் தெரியும் அதில் அதற்குள் நான் வரமுடியாமைக்கு உனக்கும் கோபம் என்பது எனக்குத் தெரியுந்தான் விலகிடல் ஒன்றுதான் விதியென்று ஆகிவிட்ட பின்பு விருப்பும் இன்றி வெறுப்பும் இன்றி விலகி விடுவதுதான் நியாயம் வலிந்து போய் வலி கொடுப்பது வழியில் முட்கள் வீசுவது பழி போடுவது பெயர் கெடுப்பது பிழைப்பைக் கெடுப்பது அவதூறு அள்ளி வீசுவது இப்படி எந்த வேலையும் உன்னளவுக்கு இல்லாவிட்டாலும் என்னாலும் செய்ய முடியுமென்றாலும் நான் செய்ய மாட்டேன் என்று உனக்குத் தெரியுமென்றாலும் நீ நிம்மதியாகத் தூ

எந்த ஆர்வம் எதற்காக?

"எனக்கு அரசியலில் ஆர்வம் அதிகம்" இந்த ஒற்றைச் சொற்றொடருக்குப் பின்னால்  ஒளிந்திருக்கும் அர்த்தங்கள்தாம் எத்தனை?  சாதி போதை மத போதை மத போதை என்ற பெயரில் ஒளிந்திருக்கும் சாதி போதை மொழி போதை இன போதை இனம் புரியாத தனி மனித போதை ஏதோவொரு காரணத்துக்காக  எந்தத் தகுதியுமற்ற தம்மோடு  ஊர்ப்பணத்தைப்   பகிர்ந்து கொண்ட  தலைமை மீதான நன்றி போதை இவையெல்லாவற்றுக்கும் மேலாக ஒரு திரைப்படம் பார்ப்பதில் ஒரு புதினம் படிப்பதில் நாய்ச்சண்டை-நரிச்சண்டை காண்பதில்  கிடைக்காத பொழுதுபோக்கு  இதில் கிடைக்கிறதே என்கிற போதை இப்படி  ஏதேதோ விதமான எண்ணற்ற போதைகளுக்கு மத்தியில்  இன்னும் எப்படியாவது  இந்தச் சமூகத்தில் வாழும் எல்லோர்க்கும்  கண்ணியமான வாழ்க்கையொன்றைப் பெற்றுக் கொடுத்திட வேண்டும் என்கிற போதையோடு வாழும்  ஒரு மிகச் சிறிய பிழைக்கத் தெரியாக் (!) கூட்டமும்  அப்படிச் சொல்லிக் கொண்டு திரிகிறது எப்படித் தெரிந்து கொள்வது  எந்த ஆர்வம் எதற்காகவென்று?!