இடுகைகள்

September, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தீவாளிச் சுடிதார்

வழக்கம் போலவே இந்த ஆண்டும் மழை சரியாகப் பெய்யாததால், தீபாவளிக் கொண்டாட்டங்கள் அவ்வளவு சிறப்பாக இல்லை.

“இனிமே வெவசாயஞ் செஞ்சு பொழப்பு நடத்துறதெல்லாம் லேசுப்பட்ட காரியமில்லப்பா. யாவாரந்தான். மெட்ராசுப் பக்கம் போயி எதாவது தொழில் செஞ்சு பொழைக்க வழிபாக்குறதுதான் புத்திசாலித்தனம். நம்ம பிள்ளைக காலத்துல எல்லாம் வெவசாயத்துக்கு மருவாதியே இராது. அம்புட்டுத்தேன். மண்ணு மலடாப் போச்சு. இன்னம் மழ தண்ணிய எதிர்பாத்துக்கிட்டுருந்தா, நம்ம தான் ஏமாளி!’’

இது மாதிரி அப்பா பேசுவதைக் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போய்விட்டது கருப்பாயிக்கு. அதுவும் நாகலாபுரம்-புதூர் போய்விட்டுத் திரும்புகிற நாட்களில், கண்டிப்பாக இந்த மாதிரிப் புலம்புவார்.

“டவுனுகள்ல இருக்குற பிள்ளைக, வேணுங்கிறப்பத் துணிமணி எடுத்து உடுத்திக்கிறுதுக. எப்பப் போனாலும் பஸ் ஸ்டாண்டுமுன்னால இருக்கிற துணிக்கடையில கூட்டமாத்தான் இருக்கு. நம்ம தான் நம்ம பிள்ளைகளுக்குத் தீபாவளிக்குக்கூட எதுவும் எடுத்துக் குடுக்க ஏலாமச் சீரழிஞ்சிக்கிட்டிருக்கோம்!’’ என்று சொன்னபோது, கருப்பாயிக்குக் கொஞ்சம் கவலையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

அப்பாவின் இயலாமை கவலையைய…

மொழிப்புற்று

ஆங்கிலம் படித்ததில்
அரைகுறையாய் இறக்கைகள் முளைத்து விட்டன என்பதற்காக
இதுவரை நடந்து வந்த
கால்களை வெட்டிக் கொண்டு
முன்னேறச் சொல்வதில் ஏற்பில்லை கனவான்களே எனக்கு!

அப்படியொன்றும்
புற்றுநோய் வந்து விடவில்லை
நம் கால்களுக்கு!!

சாதி தேவதை

அந்த அழகான - சிறிய கிராமத்தின் மேலக் கடைசியில் கிழக்காகப் பார்த்துத் திரும்பிய பெருமாள் கோயில்... உயரமான கோபுரம்... உள்ளே பணக்காரச் சாமி. கோயிலுக்கு முன்னால் அடி குழாய். அந்தத் தெருவுக்கே குடிநீர் அந்தக் குழாயில் இருந்துதான் கிடைக்கிறது. கோட்டைச் சுவருக்கு உட்புறம் கோயிலைச் சுற்றி முழுவதும் துளசிச் செடி. மணம் மூக்கைத் துளைக்கும். முன்பெல்லாம் ஆண்டுக்குப் பன்னிரண்டு திங்கட்களும் எப்போதும் அப்படித்தான் இருப்பது போலத் தோன்றியது. இப்போது அதுவும் பெரும்பாலும் பட்டுப் போய், அங்கே துளசிச் செடிகள் வாழ்ந்ததற்கான தடயங்களாக அங்கொன்றும் இங்கொன்றும் என்றுதான் சில செடிகள் இருக்கின்றன. குறிப்பிட்ட சில மாதங்களில் மட்டும் பசுமையும் மணமும் கூடுதலாக இருக்கும். கோயிலுக்குப் பின்புறம் வேலி மரங்கள் நிறைந்த கரிசற் காடு. கோயிலுக்கு முன்புறம் அடிகுழாய்க்கு அருகில் சிறியதாக ஒரு விளையாட்டுக் களம். அதுதான் அந்தக் கிராமத்து அசாருதீன்களும் தெண்டுல்கர்களும் கிரிக்கெட் விளையாடும் இடம். சனிக்கிழமை கோயிலில் பாதரச விளக்கு எரியும் போது பகலிரவு ஆட்டமும் நடைபெறும். சில நேரங்களில் அடிகுழாய்க்குத் தண்ணீர் அடிக்க வரும் பெண்…

பறிச் சீட்டு

கந்தவேலாசாரி...
தச்சுத் தொழிலில் கைதேர்ந்தவர் என்பதற்காக மட்டுமல்ல. பல்வேறு மற்ற காரணங்களுக்க்காகவும் மதிக்கப்படுபவர். சுற்றியிருக்கிற கிட்டத்தட்ட இருபது-முப்பது கிராமங்களில் நன்கறியப் பட்டவர். அந்தப் பகுதியில் கடந்த நாற்பது ஆண்டுகளில் கட்டப்பட்ட பெரும்பாலான வீடுகளில் எல்லாமே தன் வேலைதான் என்கிற மாதிரித்தான் பேசுவார். அதுதான் உண்மையும். யாரைப் பற்றிப் பேசினாலும் அந்தத் தெருவில் இந்த ஆண்டு இன்னின்ன வேலைகள் செய்தோமே என்பதோடு தொடர்பு படுத்தி - நினைவு படுத்தித்தான் பேசுவார். "அதாம்ப்பா, மேலத்தெருவில்எம்பத்தி நாலில் மரப்படிக்கட்டு கட்டிக் குடுத்தோமே! அந்த மாடி வீடு... கெணத்துல இருந்து ஏழாவது வீடு... அந்த வீட்டுக்காரந்தான்!" என்கிற மாதிரி. ஆசாரிமார் தெருவிலேயே பெரிய வீடு இவருடையதுதான். தச்சுத்தொழில் பார்த்தும் இப்படியொரு வீடு கட்ட முடியும் என்று ஊருக்குக் காட்டியவர். செலவைக் குறைத்து சேமிப்பைக் கூட்டிக் கொள்ள வேண்டும் என்கிற அவருடைய அடிப்படை விதியை மட்டும் இன்றுவரை யாரும் சரியாகப் புரிந்து கொண்டபாடில்லை. ஆனால் தெருவில் இருக்கிற ஒவ்வொரு ஆசாரியும் இவரை மாதிரி வரவேண்டும் என்கிற ஆசையும…