கலாச்சார வியப்புகள்: இலண்டன் - 2/12

கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! தொடர்ச்சி... இருட்டி விட்டதால் வெளிச்சத்தில் இலண்டன் எப்படி இருக்கிறது என்று மேலிருந்தே காணும் வாய்ப்புக் கிடைத்தது. சிங்கப்பூரில் உணர்ந்தது போலவே இதிலும் பெரிதாக எதுவும் பிரமிப்படைய வைக்க வில்லை. இன்னும் சொல்லப் போனால், சிங்கப்பூரில் கூட சக்தி வாய்ந்த விளக்குகளின் வெளிச்சம் ஓரளவு மிரட்டியது. இலண்டனின் வெளிச்சம் அதை விட சிறிது குறைவாகத்தான் இருந்தது. ஆனால், இலண்டனுக்கென்று எவ்ளோ பெரிய வரலாறு இருக்கிறது. நம்மை வந்து கட்டிப் போட்டு ஆண்டவர்களின் தலைநகரம். ஆங்கிலத்தின் தலைநகரம் என்று சொல்லலாம். சென்று இறங்கிய பின்...