கலாச்சார வியப்புகள் - மீண்டும் இங்கிலாந்து - 3/9

கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! வியப்புகள் தொடர்கின்றன... நலப்பணி அரசு (WELFARE STATE) இங்கே கல்வியும் மருத்துவமும் அனைவருக்கும் இலவசம் என்று பார்த்தோம். பெரும் பணக்காரர்கள் தவிர்த்து மற்ற எல்லாப் பிள்ளைகளும் ஒரே மாதிரியான பள்ளிகளில்தாம் படிக்கிறார்கள். அப்படியொரு பேச்சைப் பேசவே, நம்ம ஊரில் பத்துத் தடவை யோசித்து, சுற்றி ஒருமுறை பார்த்து விட்டுத்தான் பேச முடிகிறது. "அதெப்படிய்யா பணக்காரன் பிள்ளையும் ஏழையின் பிள்ளையும் ஒரே படிப்பைப் படிக்க முடியும்?" என்பதைப் பதில் சொல்ல முடியாத அளவுக்குச் சுழற்றியடித்துக் கேட்டு விடுகிறார்கள். "நான் ...