ஏக்கம்

என் மூன்றாம் வகுப்பில் மூன்று கருப்பசாமிகள் இருந்தார்கள் ஏழாம் வகுப்பில் இரண்டு மாரியம்மாக்கள் இருந்தார்கள் பத்தாம் வகுப்பில் கூட ஒரே ஒரு ரமேஷோ சுரேஷோ இருக்கவில்லை பன்னிரண்டாம் வகுப்பில் கூட ஒரே ஒரு ஆஷாவோ உஷாவோ இருக்கவில்லை பின்குறிப்பு: "இது போன்று கேவலமாக ஏதாவது எழுதிக் கொண்டு அதற்குக் கவிதை என்று பெயர் கொடுக்காதேடா வெங்காயம்!" என்று திட்டுபவர்கள் கூட ரமேஷ்-சுரேஷாக இருந்தால் நன்றாக இருக்கும் (பெண்கள் அப்படியெல்லாம் மண்டையாகப் பேச மாட்டார்கள் - பிடிக்காவிட்டால் ஒதுங்கிப் போய் விடுவார்கள் என்பதால் ஆஷா-உஷா பற்றிப் பேச வேண்டியதில்லை இங்கே!). :)