ஏக்கம்
என் மூன்றாம் வகுப்பில் மூன்று கருப்பசாமிகள் இருந்தார்கள்
ஏழாம் வகுப்பில் இரண்டு மாரியம்மாக்கள் இருந்தார்கள்
பத்தாம் வகுப்பில் கூட
ஒரே ஒரு ரமேஷோ சுரேஷோ இருக்கவில்லை
பன்னிரண்டாம் வகுப்பில் கூட
ஒரே ஒரு ஆஷாவோ உஷாவோ இருக்கவில்லை
பின்குறிப்பு: "இது போன்று கேவலமாக ஏதாவது எழுதிக் கொண்டு அதற்குக் கவிதை என்று பெயர் கொடுக்காதேடா வெங்காயம்!" என்று திட்டுபவர்கள் கூட ரமேஷ்-சுரேஷாக இருந்தால் நன்றாக இருக்கும் (பெண்கள் அப்படியெல்லாம் மண்டையாகப் பேச மாட்டார்கள் - பிடிக்காவிட்டால் ஒதுங்கிப் போய் விடுவார்கள் என்பதால் ஆஷா-உஷா பற்றிப் பேச வேண்டியதில்லை இங்கே!). :)
ஏழாம் வகுப்பில் இரண்டு மாரியம்மாக்கள் இருந்தார்கள்

ஒரே ஒரு ரமேஷோ சுரேஷோ இருக்கவில்லை
பன்னிரண்டாம் வகுப்பில் கூட
ஒரே ஒரு ஆஷாவோ உஷாவோ இருக்கவில்லை
பின்குறிப்பு: "இது போன்று கேவலமாக ஏதாவது எழுதிக் கொண்டு அதற்குக் கவிதை என்று பெயர் கொடுக்காதேடா வெங்காயம்!" என்று திட்டுபவர்கள் கூட ரமேஷ்-சுரேஷாக இருந்தால் நன்றாக இருக்கும் (பெண்கள் அப்படியெல்லாம் மண்டையாகப் பேச மாட்டார்கள் - பிடிக்காவிட்டால் ஒதுங்கிப் போய் விடுவார்கள் என்பதால் ஆஷா-உஷா பற்றிப் பேச வேண்டியதில்லை இங்கே!). :)
எனக்கு பிடிச்சிருக்கு .
பதிலளிநீக்கு''ஒரு காகம்
கருப்பு காகம் "
என்றெல்லாம் எழுதிக்கொண்டு கவிதை என்கிறார்கள்.
புடிக்கவில்லை என்று சொல்வதற்கு முன் புரிந்ததா என்பது முக்கியம் இல்லையா?
கவிதை என்பது எழுதுபவர் நினைத்த அர்த்தம் தவிர வேறு பல அர்த்தத்தையும் சுமந்திருக்கும் அது படிப்பவரின் கற்பனை திறன் பொருத்தது.
ஆகா! கவிதைக்குக் கவிதையின் கருத்து. இதுதான் உன் முதல் கருத்துப் பிரவேசம் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு"ஆமடா, நீங்களே எழுதி நீங்களே ரசிச்சுக்குங்க!" என்று யாராவது கருவக் கூடும். அதனால் அடக்கியே வாசிப்போம்! :)
யார் என்ன நினைப்பார்களோ - சொல்வார்களோ என்று பயந்து திரிவதே நமக்கும் வேலையாய்ப் போயிற்று.
good
பதிலளிநீக்குThank you, Mary!
நீக்கு//நீங்களே ரசிச்சுக்குங்க// ரசனை பல சமயங்களில் படைப்பை விட நன்றாக இருக்கும் :)
பதிலளிநீக்குஉண்மைதான்! அதுவும் நம்முடையதையே இரசிப்பது! :)
நீக்குஎனக்கு புதுக்கவிதைகள் புரிவதுமில்லை, அவ்வளவாக பிடிப்பதும் இல்லை. ஒரு வேளை இதைத்தான் 'சீ, சீ, இந்த பழம் புளிப்பு' என்று சொல்வார்களோ? :P
பதிலளிநீக்குவாங்க! வாங்க!! நீண்ட நாட்கள் ஆகி விட்டன.
நீக்குஎனக்கும் முக்கால்வாசிப் புதுக்கவிதைகள் புரிபடுவதில்லை. தமிழில் புதுக்கவிதை எங்கோ போய்விட்டது. நான் இன்னும் முப்பது-முப்பத்தைந்து வருடங்கள் பின்னால் இருக்கிறேன் அல்லது இன்னும் களத்துக்குல்லேயே வரவில்லை எனலாம். முப்பது-முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னால் பிறந்த எனக்கே இந்தப் பாடு என்றால், உங்களுக்குச் சொல்லவா வேண்டும்?! அதுவொன்றும் தவறும் இல்லை. யாருக்கு எது பிடிக்கிறதோ அதைச் செய்து கொள்ள வேண்டியதுதான். உண்மைதான். எட்டாத பழங்கள் எப்போதுமே புளிக்கத்தான் செய்யும்! :)
தங்களின் ஏக்கம் ம்ம்ம்ம்..................
பதிலளிநீக்கு