ஞாயிறு, ஏப்ரல் 05, 2015

என்ன கருமமடா இது?

இந்தக் கொடுமையான உணர்வின் பெயர்தான் என்ன?

உன் தெருவுக்குள் நுழைகிற போதெல்லாம்
உடல் நடுங்குகிறதே எதற்காக?

உன் மூஞ்சியில் முழித்துவிடக் கூடாது என்று 
உதறித் துடிக்கும் அதே வேளையில்
உள்ளுக்குள் இன்னோர் ஆசை
உன் முகத்தைக் கண்டுவிட முடியாதா என்றும்
ஏங்கித் தொலைக்கிறதே

உன்னைக் காணாமல் கடந்து விட்ட பின்பு
பிடிபடாமல் தப்பிய திருடனைப் போன்ற பெருமூச்சும்
பார்த்துத்தான் தொலைந்திருக்கலாமே என்றொரு தோல்வியுணர்வும் 
ஒருங்கே வதைக்கும் 
இந்தக் கொடுமையான நோய்க்குத்தான் பெயர் என்ன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...