முகநூல் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு ஒரு நல்ல வியாபார வாய்ப்பு

இன்றைய புழுத்த ஊடக உலகில் முகநூல் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு ஒரு நல்ல வியாபார வாய்ப்பு இருக்கிறது. உலகமெங்கும் உண்மையிலேயே மக்களுக்கு முக்கியமான செய்திகளைக் கிடைக்க விடாமல் செய்வதற்காகவே ஊடகத்துறை என்றொரு தனித்துறை இயங்கிக் கொண்டிருக்கிறது. அவர்களின் ஒரே வேலை, அவர்களுடைய முதலாளிகள் சொல்படி, யாருக்கும் பயனில்லாத அல்லது பரபரப்பை உண்டாக்குகிற அல்லது ஏமாற்றுகிற செய்திகளை வெளிக்கொண்டு வந்து மக்களை மற்ற முக்கியமான செய்திகள் பற்றிச் சிந்திக்க விடாமல் வைத்துக் கொள்வது மட்டுமே. அதையும் மீறிச் சில முக்கியமான செய்திகள் வெளிவருவது, முகநூலிலும் அது போன்ற மற்ற சமூக ஊடகங்களிலும் வீரியமாகச் செயல்படும் சில தனிமனிதர்களின் உழைப்பால் மட்டுமே. இதை அடுத்த கட்டத்துக்கு இட்டுச் செல்லும் விதமாக, முகநூலும் கூகுளும் என்ன செய்யலாம் என்றால், ஊடகங்கள் பார்க்க மறுக்கிற அல்லது மறைக்க முயல்கிற முக்கியமான செய்திகளை இன்னும் சிறப்பான முறையில் வெளிக்கொண்டு வந்து அவர்களின் பயனர்களிடம் விட்டுவிட்டால் போதும். உண்மைச் செய்திகளும் வந்த மாதிரி இருக்கும். பொய்யை விற்றுப் பிழைப்பு நடத்தும் செய்தி வியாபாரிகளும் மெதுவாக அழிந்து தொலைவார்கள். ஒரே நாளில் நடத்த முடிகிற வேலை இல்லை இது. அயராத முயற்சியின் மூலம் கண்டிப்பாகச் சாதிக்க முடியும்.

மார்க் சுக்கர்பர்க், சுந்தர் பிச்சை - நாங்க ரெடி. நீங்க ரெடியா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

உயர் தனிச் செம்மொழி?!

யுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்