ஞாயிறு, மார்ச் 13, 2016

கருணாகரன்

முடி திருத்துகையில்
மகனுக்குக் கழுத்தருகில் கத்தி பட்டதால்
கீறல் விழுந்த கோபத்தில்
கடைக்காரரைக் கண்டமேனிக்குத் திட்டி
கடுமையாகச் சண்டை போட்டு
அப்படியே அடுத்த கடைக்குப் போய்
இளங்குட்டியாகப் பார்த்து
கண் முன்பே கரகரவென்று கழுத்தறுப்பதைப் பார்த்து
பிள்ளைகள் சாப்பிட வசதியாக
நல்ல கறியாகப் பிரித்து
ஒன்றரைக் கிலோ வாங்கிக் கொண்டு
வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார்
கருணாகரன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...