பத்திரிகாதர்மம் = பத்திரிகை + (அ)தர்மம்?!
முன் குறிப்பு: சில ஆங்கில ஊடகப் பெருங்கைகள் திரைக்குப் பின் செய்கிற வேலைகள் பற்றிய சமீபத்திய சர்ச்சைகளுக்கு முன் எழுதிய கட்டுரை இது. எனவே, காலத்தில் ஒரு வருடம் பின்னால் சென்று, அங்கேயே அமர்ந்திருந்து இதைப் படியுங்கள். ஓரளவு சரிதான் எனப்படலாம். நம்மைப் போன்ற சாமானியர்கள் ஊடகங்கள் ஒருவரைப் பற்றி என்ன சொல்கின்றனவோ அதை நம்புவதுதான் இயற்கை. ஒவ்வொரு செய்தியையும் அவை உருவாகும் ஒவ்வொரு இடத்துக்கும் நேரடியாகச் சென்று சேகரிக்க முடியாது நம்மால். பிராந்திய மொழி ஊடகங்களை விட ஆங்கில ஊடகங்களின் தரமும் முதிர்ச்சியும் பல மடங்கு பரவாயில்லாமல் இருக்கின்றன. எனவே, அவர்களை நாம் நம்புவது அதனினும் இயற்கையானதே. அரசியல்க் கட்சிகளும் தலைவர்களும் ஊடக வட்டாரத்தில் எப்படியெல்லாம் காக்கா பிடிக்கும் வேலைகள் செய்கிறார்கள் என்பது பற்றி நமக்குத் தெரிய வருவதே இல்லை. எல்லோருடைய காக்கா பிடித்தல் பற்றியும் எழுதும் அவர்களிடம் செய்யப்படும் காக்கா பிடித்தல்கள் பற்றி யார் எழுதுவது? ஊடக வட்டாரத்துக்கு நெருங்கிய என் நண்பர்களிடமிருந்து நான் அடிக்கடிக் கேள்விப் படும் ஒரு செய்தி அவர்கள் காசுக்கு எழுதுவ...