இடுகைகள்

கலாச்சார வியப்புகள் - மீண்டும் இங்கிலாந்து - 2/9

படம்
கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! வியப்புகள் தொடர்கின்றன... வெஸ்ட்மின்ஸ்டர்  கிரீன் பார்க்கும் பக்கிங்காம் அரண்மனையும் இருப்பது வெஸ்ட்மின்ஸ்டர் என்னுமிடத்தில். அங்குதான் இங்கிலாந்தின் பாராளுமன்றமும் பல தூதரகங்களும் கூட இருக்கின்றன. முதன்முறை டெல்லி சென்ற போது, பாராளுமன்றம், குடியரசுத் தலைவர் மாளிகை போன்ற தொலைக்காட்சியில் மட்டும் பார்த்திருந்த பல கட்டடங்களை நேரில் பார்த்த போது, ஒருவித சிலிர்ப்பு உண்டானது. அதைப் போன்ற ஓர் உணர்வு பக்கிங்காம் அரண்மனையைப் பார்க்கும் போதெல்லாம் உண்டானது. அந்தப் பகுதியில் நடமாடும் போது ஓர் அதீத பாதுகாப்பு உணர்வ...

கலாச்சார வியப்புகள் - மீண்டும் இங்கிலாந்து - 1/9

படம்
கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! வியப்புகள் ஆரம்பம்... மீண்டும்... பழங்கதை  சென்ற ஆண்டு இலண்டனில் ஒரு மாத வேலைக்குக் குடும்பத்தோடு பெட்டி படுக்கைகளையும் சேர்த்துக் கட்டிக் கொண்டு வந்திறங்கினேன். ஒருவேளை நீண்ட காலம் இருக்க நேர்ந்தால் அப்படியே இருந்து கொள்ளலாம் அல்லது சொந்தச் செலவில் குடும்பத்துக்கும் ஒரு சுற்றுலா அனுபவம் கிடைத்த மாதிரி இருந்து விட்டுப் போகட்டும் என்று அப்படிச் செய்தோம். வயிற்றில் ஒரு குழந்தையோடு இருந்த மனைவியோடு குளிர் காலத்தில் வந்திறங்கியதால் அதிகம் சுற்றியும் பார்க்க முடியவில்லை. அந்தப் பழம் புளித்து ஊர் திரும்பி விட...

கலாச்சார வியப்புகள் - மீண்டும் சிங்கபுரம் - 7/7

படம்
கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! தொடரும் வியப்புகள்... ஊரெங்கும் எல்லாச் சந்தைகளிலுமே டூரியன் (முள்நாறிப் பழம்) என்றொரு பழத்தைக் கூவிக் கூவி விற்கிறார்கள். அது குவித்துவைக்கப் பட்டிருக்கும் பக்கம் போனாலே நாற்றம் குமட்டுகிறது. ஆனால் அதைச் சிங்கப்பூரர்கள் பெரிதும் விரும்பி உண்பார்கள் போலத் தெரிகிறது. விற்பனை எப்போதும் பிய்த்து வாங்குகிறது. பார்ப்பதற்குப் பலாப் பழம் போல இருக்கிறது. ஒருமுறை வாங்கிச் சென்று விட்டு வீட்டில் யாருமே நெருங்கக் கூட மாட்டேன் என்று சபதம் எடுக்க, எல்லாத்தையும் நாமே தின்று தீர்க்க வேண்டிய கட்டாயம் ஆகி விட்டது. இப...

ஏக்கம்

படம்
என் மூன்றாம் வகுப்பில் மூன்று கருப்பசாமிகள் இருந்தார்கள் ஏழாம் வகுப்பில் இரண்டு மாரியம்மாக்கள் இருந்தார்கள் பத்தாம் வகுப்பில் கூட ஒரே ஒரு ரமேஷோ சுரேஷோ இருக்கவில்லை பன்னிரண்டாம் வகுப்பில் கூட ஒரே ஒரு ஆஷாவோ உஷாவோ இருக்கவில்லை பின்குறிப்பு: "இது போன்று கேவலமாக ஏதாவது எழுதிக் கொண்டு அதற்குக் கவிதை  என்று பெயர் கொடுக்காதேடா வெங்காயம்!" என்று திட்டுபவர்கள் கூட ரமேஷ்-சுரேஷாக இருந்தால் நன்றாக இருக்கும் (பெண்கள் அப்படியெல்லாம் மண்டையாகப் பேச மாட்டார்கள் - பிடிக்காவிட்டால் ஒதுங்கிப் போய் விடுவார்கள் என்பதால் ஆஷா-உஷா பற்றிப் பேச வேண்டியதில்லை இங்கே!). :)

கலாச்சார வியப்புகள் - மீண்டும் சிங்கபுரம் - 6/7

படம்
கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! தொடரும் வியப்புகள்... இங்கே இருக்கும் 70% சீனர்கள் யாவரும் புத்த மதத்தவர் அல்லர். கிறித்தவர்களும் இருக்கிறார்கள். ஆனால், பெரும்பான்மையானவர்கள் புத்த மதத்தினரே. எனவே, புத்த மதப் பழக்க வழக்கங்களையும் நேரில் இருந்து பார்க்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. புத்த மதம் பல வகைகளில் இந்து மதப் பழக்கங்களைக் கொண்டுள்ளது. சீனர்களின் கடையில் காலையில் நம்மைப் போன்றே கடவுளுக்குப் படையல் இட்டு வணங்கிய பின்தான் தொழில் ஆரம்பிக்கிறார்கள். பூசைச் சாமான்கள் மட்டும் விற்கும் கடைகள் கூட இருக்கின்றன. காவியும் மஞ்சளுமாக அவையும...

தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் - 6/6

படம்
தொடர்ச்சி... "பதிமூனில் ஒண்ணு" கதையில் பள்ளியில் இடம் வேண்டிக் காத்திருக்கும் மாணவர்கள் பற்றியும், நல்ல ரிசல்ட் காட்ட வேண்டும் என்று மாணவர்களைச் சல்லடை போட்டு வடிகட்டிக் கொடுமை செய்யும் பள்ளிகள் பற்றியும் பேசப்படுகிறது. எப்படியும் இடம் பெற்று விட வேண்டும் என்று கெஞ்சிக் கூத்தாடி, காத்துக் கிடந்து, கடைசியில் சாதித்து விடும் ஒரு மாணவனின் கதை. அப்படி வந்து காத்திருக்கும் பதிமூனு மாணவர்களில் பனிரெண்டு பேர், வாழ்க்கையை வெறுத்து, நம்பிக்கை இழந்து, மறுநாள் வராததால், நம்ம நாயகனுக்கு இடம் கிடைத்து விடும். ஆனால், அந்த ஒருநாட் கூத்தை மட்டும் பேசுவதில்லை கதை. கிட்டத்தட்ட அவனுடைய பள்ளி வாழ்க்கையே அலசி ஆராயப்படுகிறது. அது அவனுடைய கதை மட்டுமல்ல. தமிழ் நாட்டில் உள்ள முக்கால்வாசிப் பள்ளிப் பையன்களின் கதை. ரிசல்ட் பைத்தியம் பிடித்த பள்ளிகளின் - அவற்றின் நிர்வாகத்தின் - தலைமையாசிரியர்களின் - ஆசிரியர்களின் - பெற்றோர்களின் கதை! மற்ற எல்லாப் பாடங்களிலும் குட்டிக் கரணம் போட்டுத் தப்பி விடுபவன், சுட்டுப் போட்டாலும் கணக்கும் ஆங்கிலமும் வராது தவிப்பான் பாவம். இந்தக் காம்ப...

தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் - 5/6

படம்
தொடர்ச்சி... "உபரி" என்ற கதையில் கணக்குத் தெரியாமல் கொஞ்சம் மிஞ்சி விடுகிற பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று பலவற்றை நினைத்துக் குழம்புகிறார் நம் கீழ் நடுத்தர வர்க்கத்துக் கதை நாயகர். தான் நீண்ட காலமாக ஆசைப் பட்டுச் செய்ய முடியாமல் போன பல செலவுகள் பற்றி யோசிக்கிறார். ஒவ்வொன்றாக மனதில் வந்து செல்கின்றன. உடல்நலம் குன்றிய மனைவிக்கு மருந்து மாத்திரை வாங்கிக் கொடுக்கலாம் என்று எண்ணுகிறார். தம் பிள்ளைகள் அதிகம் ஆசைப்படும் தின்பண்டம் ஏதாவது வாங்கிக் கொடுக்கலாம் என்று விரும்புகிறார். அவருடைய மனதில் வந்து செல்லும் ஒவ்வொரு ஆசையும் மிக நியாயமானவை-உணர்வு பூர்வமானவை. நாமெல்லாம் நினைப்பதற்கு முன்பே செலவு செய்து விடக் கூடியவை. அவ்வளவு குழப்பத்தில் குரங்கு போல ஒன்றில் இருந்து ஒன்றாகப் பல ஆசைகளுக்குத் தாவி, இப்படிச் செய்யலாம் என்று ஒரு முடிவுக்கு வரப் போகும் நேரத்தில், நீண்ட காலமாக மாற்றப் படாமல் பிய்ந்து கிடக்கும் பாத்ரூம் வாளியைப் பார்க்கிறார். அதைப் பார்த்துப் பரிதாபப் பட்டு இறுதியில் வாளியையே மாற்றி விடலாம் என்று முடிவு செய்வார். இதுவும், ...