இடுகைகள்

இங்கு அரசியல் பேசாதீர்

“பழி தீத்துட்டாய்ங்கடா. குடிய இன்னைக்கு சங்கறுத்துட்டாய்ங்க!” என்றான் தமிழ்க்குடிமோனின் நெருங்கிய பணித் தோழர்களில் ஒருவனான மதுரை. ‘மதுரை’ என்பது அந்த நிறுவனத்தில் - அணியில் நீண்ட காலமாகப் பணிபுரியும் ஒரே மதுரைக்காரனான முத்துவின் பெயர். இடம், பொருள், ஏவல் பொருத்து அவர் ‘மதுரை’ எனவும் ‘முத்து’ எனவும் இருவேறு பெயர்கள் கொண்டு அழைக்கப்படுவார். தமிழ்க்குடிமோன்தான் ‘குடி’. நீளநீளமான பெயர்களை இரண்டு-மூன்று எழுத்துக்களுக்குள் சுருக்கிவைத்துக்கொள்வது அவனுடைய அலுவலகத்தில் மட்டுமல்ல, வெளிநாட்டுக்காரர்களோடு அதிகம் பணிபுரியும் அது போன்ற எல்லா நிறுவனங்களிலுமே இருக்கும் பழக்கம்தான். ‘தமிழ்க்குடிமகன்’ என்பதுதான் ‘தமிழ்க்குடிமோன்’ என்று மருவி மாறியிருந்தது. மருவலுக்கான மாபெரும் காரணம் தலைவனின் மலையாள மோகம். மலையாள மோகம் என்பது அம்மொழியின் மீதானது என்பதைக் காட்டிலும் அம்மொழி பேசும் மக்கள் மீதானது. மக்களிலும் குறிப்பாகப் பெண்குட்டிகள் மீதானது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லைதானே! காலம்காலமாகவே தமிழ்க்குடிமகன்களுக்கு மலையாளக்குடியின் மோன்களைவிட மோள்கள் மீது படிந்து படர்ந்திருக்கும் பாசம் இயல்பானதுதானே...

யாதும் ஊரே: அமேரிக்கா 3

முதல் பாகத்தில் அமேரிக்கா பற்றியும் இரண்டாம் பாகத்தில் கலிஃபோர்னியா மாநிலம் பற்றியும் பார்த்தோம். அதிலேயே நாங்கள் வந்திறங்கியிருக்கும் நகரமான லாஸ் ஏஞ்சலஸ் பற்றியும் ஓரளவு பார்த்தோம் எனினும், இந்தப் பாகத்தில் அது பற்றி இன்னும் விரிவாகப் பார்த்துவிடுவோம். ஆங்கிலப் பெயர்களைத் தமிழில் வேறு மாதிரி எழுதும் பழக்கம் இருப்பது இதற்கும் பொருந்தும். தமிழில் எழுதுகிற எல்லோருமே இந்த நகரத்தை 'லாஸ் ஏஞ்சல்ஸ்' என்றுதான் எழுதுகிறோம். சொல்வதும் கூட அப்படியே. அது 'ஏஞ்சல்ஸ்' அல்ல, 'ஏஞ்சலஸ்'. 'ல்' அல்ல, 'ல'. இங்கே உள்ள எல்லா மாநிலங்களுக்குமே இரண்டெழுத்தில் ஒரு சுருக்கப் பெயர் இருக்கும். 'நியூ யார்க்' என்றால் 'NY'. 'நியூ ஜெர்சி' என்றால் 'NJ'. 'கலிஃபோர்னியா' என்றால் 'CA'. இப்படி ஐம்பது மாநிலங்களுக்கும் ஒவ்வொரு சுருக்கப் பெயர் உண்டு. நம்மூரில் வாகனப் பதிவு எண்ணுக்கு முன்னே TN, KA, KL என்று இருப்பது போல். ஆனால் இங்கே அஞ்சல் துறை உட்பட எல்லோராலும் முழுமையாக இந்த இரண்டெழுத்துச் சுருக்கப் பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதில்...

மேற்குத் தொடர்ச்சி மலை

படம்
சமீபத்தில் மனையாளின் புண்ணியத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை படம் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அருமையான படம். பாராட்ட வார்த்தைகளே இல்லை எனலாம். அவ்வளவு சூப்பராக இருந்தது. இப்படியான படங்கள் மிகக்குறைவாகவே தமிழில் 'பார்த்திருக்கிறேன்'. 'வந்திருக்கின்றன' என்று சொன்னால்தானே தப்பாகிவிடும். 'பார்த்திருக்கிறேன்' என்றே சொல்லிவிடுவதே நம்மைப் போன்று சினிமாக் கொட்டகையைவிட்டு வெகு தொலைவில் விலகி வாழ்பவர்களுக்கு நல்லது. தமிழக-கேரள எல்லையில் இருக்கும் ஒரு கிராமத்து மக்களின் கதை. படம் தொடங்கியதுமே அதற்குள் ஒருவராக நாம் மாறிவிட முடியும். நடக்கும் கதையில் நமக்கு ஓர் இடம் இல்லை என்றாலும் அதையெல்லாம் ஓரத்தில் நின்று ஒரு டீயைக் குடித்துக்கொண்டே பார்க்கும் ஒருவராக மாறிவிடலாம். இது ஒரு திரைப்படம் என்று எண்ணக்கூடிய வகையில் ஒரு பிசிறு கூட இல்லை. அப்படியான மக்களில் ஒருவராக அல்லது அவர்களின் வாழ்க்கையை மிக அருகில் இருந்து பார்த்தவர்களுக்கு இது மிகவும் எளிது. இதற்குப் பழக்கமே இல்லாத வேறு ஓர் உலகத்தைச் சேர்ந்தவர்களும் நம்மில் இருக்கத்தான் செய்கிறோம். அவர்களுக்கு இது எப்படி இருக்கும...

யாதும் ஊரே: அமேரிக்கா 2

சென்ற பாகத்தில் அமேரிக்கா பற்றிய அறிமுகத்தையே முடிக்கவில்லை. அதை முடித்துவிட்டுத்தானே அமேரிக்காவில் எங்கே வந்து இறங்கினோம் என்பதைப் பற்றிப் பேச முடியும்! அமேரிக்கா என்றாலே நமக்கு முதலில் கண்ணில் வருவது அந்தச் சுதந்திர தேவி சிலையும் அங்கே தென்படும் குளிருக்கான பல அறிகுறிகளுமே, இல்லையா? பனி சொட்டும் மரங்கள், குளிருக்கு உடலை முழுக்க மறைத்து உடையணிந்து நடமாடும் மனிதர்கள், அவர்களின் தலைகளில் இருக்கும் குல்லா ஆகியவைதானே! ஆனால் அது மட்டும் அமேரிக்கா இல்லை. அமேரிக்கா என்பது ஒரு பரந்து விரிந்த பெரும் நிலப்பரப்பு. இந்தியாவை எப்படித் துணைக்கண்டம் என்கிறோமோ அது போலவே இதுவும் ஒரு துணைக்கண்டம்தான். நிலப்பரப்பில் இந்தியாவைவிடப் பல மடங்கு பெரிய நாடு. பருவநிலைகளும் நில அமைப்பும் கூட இந்தியாவைவிடப் பல மடங்கு விதவிதமானது. ஆனால் இந்தியா போல் பரந்த பண்பாடுகளைக் கொண்ட நாடு என்று சொல்ல முடியாது. அதனால் அமேரிக்கா ஒரு துணைக்கண்டம் என்று சொல்வதைத் தாங்கிக்கொள்ள முடியாது போகலாம் உங்களுக்கு. இங்கேயும் உலகெங்கும் இருந்து வந்து வாழும் பல்வேறு இனக்குழுவினர் - மொழியினர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நம்மைப் போ...

யுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்

பெரும வரலாற்றாசிரியரும் (Macro Historian), பேராசிரியரும், ‘சேப்பியன்ஸ்’, ‘ஹோமோ டேயஸ்’ஆகிய மிகச் சிறப்பாக விற்றுக்கொண்டிருக்கும் நூல்களின் ஆசிரியரும், இந்த உலகின் மிகவும் புதுமையான மற்றும் கிளர்ச்சியூட்டும் சிந்தனையாளர்களில் ஒருவருமான யுவால் நோவா ஹராரி, தன் புத்தம்புதிய பணியான "21-ஆம் நூற்றாண்டிற்கான 21 பாடங்கள்" நூல் பற்றி உரையாடுகிறார்.  இன்றைய மிக முக்கியமான பிரச்சனைகளின் வழியே “மிகவும் மனதை விரிவாக்கும்” ஒரு பயணமாகச் சொல்லப்படும் “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” நூல், நம்மைச் சுற்றி நடந்துகொண்டிருக்கும் தலைசுற்றவைக்கும் - குழப்பமான மாற்றங்களுக்கு நடுவே நம் கூட்டு கவனத்தைப் பேணிக் காக்க வேண்டிய அவசியத்தை நினைவுறுத்துகிறது.  நெறியாளர்: வில்சன் ஒயிட்.  நூல் வாங்க:  https://goo.gl/CVDJzG   யுவால் நோவா ஹராரியின் யூட்யூப் அலைவரிசை:  https://www.youtube.com/user/YuvalNoahHarari   யுவால் நோவா ஹராரி  21-ஆம் நூற்றாண்டிற்கான 21 பாடங்கள்  செப்டம்பர் 14, 2018  வில்சன் ஒயிட்: அனைவருக்கும் மதிய வணக்கம், குறிப்பாக இங்கே கலிஃபோர்னியாவில் இருப்போரு...