புதன், ஜூன் 08, 2011

எது தவறு?

தரங்கெட்ட அரசியல் தவறா?
அதைச் சாடும்
தரங்கெட்ட பேச்சு தவறா?

மேடை நாகரீகம் பற்றிப் 
பாடம் நடத்துவோரே!
வாழ்க்கை நாகரீகத்தை விடவா
மேடை நாகரீகமும் 
ஆடை நாகரீகமும் 
முக்கியமாகி விட்டன நமக்கு?! 

பொது வாழ்க்கையில்
தரம் பற்றிக் கேட்டால்
சமரசம் சகஜம் என்கிறீர்
பேச்சில் மட்டும் 
அது பேண வேண்டும் என்கிறீர்

செய்வதை விடவா
வைவது தவறு?
செய்வோரை விடவா
வைவோர் கெட்டவர்?

சாக்கடையில் பன்றிகள் நாறிய காலம் போய்
சாக்கடையையே பன்றிகள் நாறடிக்கும் காலத்தில்
பன்றியாய் வாழ்வதை விடவா
அவற்றை
பன்றிகள் என்று 
அழைப்பது குற்றமாகும்?

பின் குறிப்பு: ஒருவேளை இதைப் படிக்க நேர்ந்தால் பன்றிகள் வருத்தப் படலாம். இவர்களை விடவா நாம் கேவலம் ஆகிவிட்டோம் என்று. அப்படி ஏதேனும் நிகழ்ந்தால் அவர்களுக்கு இப்போதே என் மன்னிப்பைச் சொல்லி விடுகிறேன் - உங்கள் மனதைப் புண் படுத்துவதல்ல என் நோக்கம். உங்களை விடத் தம்மைப் பெரிதாக நினைக்கும் எங்களில் சிலருக்கு அது உண்மையில்லை என்று உணர்த்த எடுத்துக் கொண்ட ஓர் அவசர ஒப்பீடே. தயவு செய்து இந்த ஒரு முறை மன்னித்து விடுங்கள். அதற்குப் பதிலீடாக பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு படித்த - எனக்கு மிகவும் பிடித்த - பன்றிகள் ஏன் மனிதர்களை விடக் கேவலமானவை அல்ல என்ற கவிதைக்கான இணைப்பை இங்கு கொடுக்கலாம் என இணையத்தில் தேடு தேடெனத் தேடினேன். கிடைக்க வில்லை. அது கிடைக்கும் போது (கண்டிப்பாக ஒரு நாள் கிடைக்கும்), கண்டிப்பாக அதைச் செய்வேன்.

10 கருத்துகள்:

 1. //வாழ்க்கை நாகரீகத்தை விடவா
  மேடை நாகரீகமும்
  ஆடை நாகரீகமும்
  முக்கியமாகி விட்டன நமக்கு?! //
  ஹா ஹா. போலி நாகரிகத்தின் அபிமானிகளுக்கு சாட்டை அடி.

  //பின் குறிப்பு://
  ஹி ஹி. இதை விட அருமையான பிற்குறிப்பை யாரும் கொடுக்கப் போவதில்லை.

  ஆறுதலாக எல்லாவற்றையும் வாசிக்க வேண்டும். எழுத்தை கொஞ்சம் பெரிதாக்க முடியுமா? கண் வலிக்கிறது.

  பதிலளிநீக்கு
 2. மீண்டும் மிக்க நன்றி அனா. இடுகைகள் பெரிதாக இருக்கின்றன என்றார்கள். அதனால் எழுத்தைச் சிறிதாக்கினேன். அதுவே கண் வலிக்கும் அளவுக்குப் போய் விட்டால், விடக் கூடாது. மாற்றி விட்டேன். இன்னும் பெரிதாக்க வேண்டும் என்றாலும் சொல்லுங்கள். செய்து விடலாம்.

  பதிலளிநீக்கு
 3. சாக்கடையில் பன்றிகள் நாறிய காலம் போய்
  சாக்கடையையே பன்றிகள் நாறடிக்கும் காலத்தில்..

  :))

  பதிலளிநீக்கு
 4. வாசிப்புக்கும் சுவைத்தலுக்கும் நன்றி முனைவர் அவர்களே. தொடர்ந்து வாருங்கள்.

  பதிலளிநீக்கு
 5. //இடுகைகள் பெரிதாக இருக்கின்றன என்றார்கள். அதனால் எழுத்தைச் சிறிதாக்கினேன்.//
  அடப்பாவிங்களா. இப்படி கூட ட்ரிக் இருக்கா. அவ்வ்வ்வ்வ்வ்வ்

  //அதுவே கண் வலிக்கும் அளவுக்குப் போய் விட்டால், விடக் கூடாது. மாற்றி விட்டேன். //
  நன்றி. படிக்க ரொம்பவே இலகுவாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 6. Love your writings. Please excuse me for commenting in English though. The best part was your pi.ku. :)

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...