செவ்வாய், செப்டம்பர் 29, 2015

மொழிப்புற்று

ஆங்கிலம் படித்ததில்
அரைகுறையாய் இறக்கைகள் முளைத்து விட்டன என்பதற்காக
இதுவரை நடந்து வந்த
கால்களை வெட்டிக் கொண்டு
முன்னேறச் சொல்வதில் ஏற்பில்லை கனவான்களே எனக்கு!

அப்படியொன்றும்
புற்றுநோய் வந்து விடவில்லை
நம் கால்களுக்கு!!

2 கருத்துகள்:

  1. அருமையான கவிதை!!! ஆழ்ந்த கருத்து. வாழ்த்துக்கள் பாரதி. தமிழை "டாமில்" என்றும், கொத்தமல்லியை "கொட்சுமலி" என்று அமெரிக்க ஆங்கிலம் தொனிக்க பேசுபவர்கள் கண்டிப்பாகப் படிக்கவேண்டிய ஒன்று :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி, தலைவரே! ஹஹஹா... இதற்கெல்லாம் ஒரு முடிவு வரத்தான் செய்யும். எப்போது என்றுதான் தெரியவில்லை. அரபு நாடுகளைப் போல நம்ம ஊரிலும் பூமிக்கடியில் ஏதாவது இருக்கிறது என்று கண்டுபிடித்து நாமும் புதுப் பணக்காரன் ஆகி விட்டால் நமக்கும் தன்மானம் கூடிவிடப் போகிறது!

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...