இடுகைகள்

செப்டம்பர், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கிறிஸ்டின் ஹனாவின் ‘பெண்கள்’ (The Women): நூலுரையாடல்

கிறிஸ்டின் ஹனாவின் ‘பெண்கள்’ (The Women): நூலுரையாடல்  கடந்த அறுபதாண்டுகளில் அமெரிக்காவில் வியட்நாம் போரைப் பற்றி நிறையவே பேசியிருக்கிறார்கள். அமெரிக்காவுக்கு வெளியே அது எவ்வளவு பேசப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை. எடுத்துக்காட்டாக நம் ஊரில் எவ்வளவு பேசியிருக்கிறோம்? வியட்நாம் போர் பற்றிய எந்த முன் அறிவும் இல்லாதவர்களுக்கு இப்புதினம் ஒரு நல்ல அறிமுகத்தைக் கொடுக்கும். வியட்நாம் போர் பற்றி ஏற்கனவே நிறையப் படித்திருப்பவர்களுக்கும் இப்புதினம் புதியதொரு பரிமாணத்தைக் காட்டும். வரலாற்றுப் புனைவு எனும் வகைப்பாட்டில் கிறிஸ்டின் ஹனாவின் ‘தி விமன்’ (‘The Women’) தனக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்திருக்கிறது. வரலாற்றுப் புதினம் என்றாலே சோழர் காலத்துக்குச் செல்லும் மொத்தமே 250 ஆண்டு கால வரலாறு கொண்டிருக்கும் அமெரிக்காவின் வகைப்பாடு இடிக்கத்தான் செய்யும். அதே வேளையில், வரலாறு என்றாலே அது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருக்க வேண்டும் என்பதும் வீண் வழக்காடல்தானே! வியட்நாம் போரில் ஈடுபட்டு, ஆனால் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போனவர்கள் எனப்படும் ஒரு குழுவின் கண்களின் வழியே அந்தப் போரை நெருக்கமாக ...