வெள்ளி, டிசம்பர் 04, 2015

பிச்சைக்காரர்கள்

சில்லறை திருப்பிக் கொடுக்காத நடத்துனர்
கையொப்பத்துக்குக் காசு கேட்கும் அலுவலர்
பொதுப்பணத்தில் வாழும் மக்கள் சேவகர்
எளியோரை ஏமாற்றிப் பிழைக்கும் பெருமுதலை முதாலாளியர்

இவர்கள் எவரும்
பிச்சைக்காரர் போல் பிச்சைக்காரர் இல்லை

இவர்கள் எவரும்
திருவோடேந்தி
பிச்சை போடுங்க சாமி என்று
கெஞ்சிக் கேட்பதில்லை

இவர்கள் எவரும்
கந்தலணிந்து
வீதிகளிலும் கோயில்களிலும்
அலைந்து திரிந்து
மடங்களில் அடைந்து கொள்வதில்லை

இவர்கள் எவரும்
காசு கொடுக்க முடியாதோரிடம் சோறும்
சோறு கொடுக்க முடியாதோரிடம் கஞ்சியும்
வாங்கிக் கொண்டு அடங்கிக் கொள்வதில்லை

இவர்களுக்கென்று
கண்ணியம் இருக்கிறது
கட்டுப்பாடு இருக்கிறது

ஆகவே
இவர்கள் எவரும்
பிச்சைக்காரர் போல் பிச்சைக்காரர் இல்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...