வெள்ளி, டிசம்பர் 04, 2015

எய்ட்ஸ்

அறிவியலின் துணையோடு
துன்பமிலாதொரு உலகம் படைத்திட
விரைந்து கொண்டிருக்கிறோம்

பாதையெங்கும் பரவிக் கிடக்கும்
முட்களையும் கற்களையும்
அகற்றிக் கொண்டே
ஆனந்தமாய் முன்னேறுகிறோம்
மனித குலத்தின் சவால்கள் அனைத்தையும்
ஒவ்வொன்றாய் முறியடித்து விட்டதாய் நினைத்துக் கொண்டு...

ஆனாலும்
புதிது புதியதாய்...
முட்களும் தடைக்கற்களும்
முளைத்துக் கொண்டே இருக்கின்றன

இப்போது
பெரியதாய் ஒரு முட்புதர்
எய்ட்ஸ் என்ற பெயரில்...

லாவகமாகத் தாவிச் சென்றால்
தப்பிக் கொள்ளலாம்

சிக்கியோருக்கும்
சிக்கப் போவோருக்கும்
மருந்து கண்டுபிடிக்க வேண்டுமென்பதில்
மாற்றுக் கருத்தில்லை

அதைவிட அவசரத் தேவை
தாவிச் செல்லும் லாவகம்

அதைவிட அவசியத் தேவை
மனசைத் தாவ விடாமை!

* 1998-ஆம் ஆண்டு நாட்குறிப்பில் இருந்து...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...