செவ்வாய், டிசம்பர் 20, 2016

விதி

இரண்டு கண்களுமிழந்த
மூன்று குழந்தைகள் கதறிக் கொண்டிருக்கின்றன
முதற் குழந்தையின் தந்தை
தன் கண்ணொன்றைக் கழற்றி வைத்து
இதனை என் பிள்ளைக்கு இப்போதே பொருத்துங்கள் என்று கதறுகிறான்
தன்னால்
தன் தந்தை கண்ணிழக்க நேரிடுகிறதே என்று கதறுகிறது குழந்தையும்
தந்தையில்லாத
இரண்டாம் குழந்தையும் கதறுகிறது
தனக்கும்
இப்படிக் கண்ணைக் கழற்றிக் கொடுக்க
ஒரு தந்தையில்லையே என்று
விதியை நொந்து
ஒன்றும் பேசாமல்
ஊமைக் கொட்டானாய் நிற்கும் தன் தந்தை
என்னதான் எண்ணிக் கொண்டிருக்கிறானோ என்று
புரிந்து கொள்ள முடியாத மூன்றாம் குழந்தையும் கதறுகிறது
இதற்குத் தந்தையில்லாமலே இருந்திருக்கலாமே என்று தலையிலடித்துக் கொண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...