பிழைத்திருத்தல்

பிழைத்திருத்தலுக்கான
உயிரினங்களுக்கிடையிலான
தொடர் போராட்டம் போலவே
உயிரினங்களிலேயே தன்னை
உயர்ந்ததாக எண்ணிக் கொண்டிருக்கிற
மனித இனத்துக்குள்ளேயே உள்ள
இனங்களுக்கிடையிலேயும்
எது உயர்ந்தது என்று
தொடர்கின்ற போராட்டமும்
பிழைத்திருத்தலுக்கானதுதானே!

வலியது வாழ்வதும்
எளியது வீழ்வதுமே
இங்கும் நியதியாகிப் போனதா
என்பது மட்டும்
இன்னும் நிச்சயமாகத் தெரியவில்லை

எது வலிமை என்பதே
இன்னும் தீர்மானமாகத் தெரியவில்லையே!

எளிமையுங்கூட
வலிமையாகப் படுகிறது
சில இடங்களில்

எளிமை போல் நடிக்கும்
சூழ்ச்சியுங்கூட
வலிமையாகப் படுகிறது
சில இடங்களில்

வலிமை போல் நடிக்கும்
சூழ்ச்சியுங்கூட
வலிமையாகப் படுகிறது
சில இடங்களில்

ஆக
கடைசியில்
வலிய உயிரினங்களும்
வலிமை எதுவென்றறிந்த
மனித இனங்களும் மட்டும்
தப்பிப் பிழைத்திடுமோ?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி