வெள்ளி, அக்டோபர் 28, 2011

அதே சாம்பல்

நம்மைக் காட்டிலும்
நல்லோருடன் முடியவில்லை...
நாம் அவர்களுக்குக்
கெட்ட பிள்ளையாகி விடுகிறோம்!
நம்மைக் காட்டிலும்
கெட்டோருடன் முடியவில்லை...
அவர்கள் நமக்குக்
கெட்ட பிள்ளையாக இருக்கிறார்கள்!

நம் போலவே நல்லோர்
நம் அளவே நல்லோர்
நம் போலவே கெட்டோர்
நம் அளவே கெட்டோர்
அதே அளவு கருப்பு
அதே அளவு வெள்ளை
அதே அளவு சாம்பல்
தேடிக் கொண்டே இருக்கிறோம்...

அவ்வப்போது அகப்படும்
அது போன்ற சில ஆட்களும்
அப்படியே தொடர்ந்திடுவதில்லை
அது போன்றே இருந்திடுவதில்லை

அதையும் மீறி
அப்படியே இருந்து விட்டாலும்
நாம் அவர்களையோ
அவர்கள் நம்மையோ
அப்படியே இருக்க விடுவதில்லை...
அல்லது இருக்கவே விடுவதில்லை...

4 கருத்துகள்:

  1. நடைமுறை வாழ்க்கைத் தத்துவத்தை எளிமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். அழகாக இருக்கிறது. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...