பொங்கல்த் திருநாள்
சான்றோரே! சபையோரே!
சகோதர நண்பர்களே!
அனைவர்க்கும் எந்தன்
அன்பான வணக்கங்கள்!
மா – பலா – வாழைப்
பழங்களும் பாலும்
பச்சரிசி வெள்ளமும்
செங்கரும்பும் தேங்காயும்
இலையும் பாக்கும்
இஞ்சியும் மஞ்சளும்
எல்லாமும் வைத்து
பிரசாதம் படைக்கவும்
பலகாரம் சமைக்கவும்
ஆசைதான் தமிழனுக்கு...
ஆசைதான் தமிழனுக்கு...
ஆனால் –
கஞ்சிக்கே வழியில்லாதவன்
தோசைக்குப் போடுவது கஷ்டம்தானே
நிமிர்ந்து வளர வேண்டிய நெல்மணிகள்
நிலைகுலைந்து கிடக்கின்றன
நம் நாட்டு மாணவர்களைப் போல!
தோகை விரித்தாட வேண்டிய கரும்புகள்
கவிழ்ந்து கிடக்கின்றன
நம்நாட்டுக் கலைஞர்களைப் போல!
வளர்ந்திருக்க வேண்டிய வாழைகள்
வாடிக் கிடக்கின்றன
நம் நாட்டு அறிஞர்களைப் போல!
காவிரியைக் காணாமல் தஞ்சையில் நஞ்சைகள்
தண்ணீர் தாகத்தில் தவிக்கும் வேளையில்...
சகதிக் காடாய் இருக்க வேண்டிய
கரிசல் பூமிகள் விரிசல் விழுந்த
புழுதிக் காடாய்க் காயும் வேளையில்...
நமக்காக வேண்டாம்
நன்றிக்காகக் கொண்டாடுவோம்!
போகியில் பொசுக்க
பழைய உடமைகள் இல்லைதான்
பாழடைந்த குணங்கள் உண்டே!
பொங்கலுக்கு உடுத்த
புதிய உடைகள் இல்லைதான்
புதுமை உணர்வுகள் உண்டே!
பழையன கழித்து புதியன புகுத்துவோம்!
புத்துயிர் பெறுவோம்! நன்றி! வணக்கம்!
* ஆதித்தனார் கல்லூரியில் முதலாண்டு படித்துக் கொண்டிருந்த போது, 21.01.1996 அன்று விடுதியில்
நடை பெற்ற பொங்கல் விழாவில் நடத்தப் பட்ட கவிதைப் போட்டியில் வாசித்து முதல்ப்
பரிசு பெற்ற கவிதை.
Worthy entry for the first prize. Loved the sentiments and words. Keep writing :)
பதிலளிநீக்குBy the way, which batch you belongs to. I too spent 6 months in Aditanar (B.Sc - Physics) in 1990 before moving to BE degree in the following year.
பதிலளிநீக்கு@Zephyr, Thank you!
பதிலளிநீக்கு@Ilavarasan, We have talked about this before. I joined in 95 so you are 5 years elder to me.
பதிலளிநீக்கு