சனி, நவம்பர் 05, 2011

அதே மொழிதான்

அதே மொழி
அதே சொற்கள்
அதே எழுத்துக்கள்...

அதெப்படி
நீரைக் கொள்ளும்
பாத்திரத்தின் வடிவம் போல்...
ஒவ்வொருவரும்
ஒவ்வொரு விதத்தில்
கையாள்கிறர்?

அதெப்படி
அதே பழைய சரக்கு கொண்டு
ஒரு சிலர் மட்டும்
புதிது புதிதாய்
ஏதோதோ உருவாக்குகிறர்?

சிலர்
நாட்டுக்குள் நடக்கும்
அக்கிரமங்களுக்கெதிராக
புரட்சித் தீ மூட்டுகிறர்!

சிலர்
வீட்டுக்குள் இருக்கும்
அமைதிக்கெதிராக
குழப்பத் தீ மூட்டுகிறர்!

சிலர்
விழித்திருப்போரையும்
விரைந்துறங்கச் செய்திடும்
வித்தை செய்கிறர்!

சிலர்
அவற்றையும்
காற்றைப் போல்
கடலைப் போல்
ஆற்றலற்றவை என்று
எதுவும் எடுக்க முயலாது
சிறிதும் கொடுக்க முயலாது
அப்படியே விட்டிடுகிறர்!

அவற்றின்
ஆற்றல் அறியாமலே
அதுவாகவே நடக்கும்
அளவற்ற எடுத்தல்கள் தவிர்த்து...

2 கருத்துகள்:

  1. ஆம். ஒவ்வொருவரும் தம் மொழியை வைத்து என்னென்னமோ செய்துகொண்டிருக்கின்றனர். ஆனால் தமிழர் மட்டும் ஒன்றே ஒன்றுதான் செய்துகொண்டிருக்கின்றனர்.

    "அழித்துக்கொண்டிருக்கின்றனர்"

    பதிலளிநீக்கு
  2. ஹாஹாஹா... கவிதைக்குக் கவிதையே கருத்துரையாக... :)

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...