புதன், நவம்பர் 02, 2011

பயம்

குப்பனுக்கும் சுப்பனுக்கும்
அலுவலகங்கள் என்றாலே உள்நுழைய பயம்
வங்கிகள் என்றால் எட்டிப் பார்க்கவே பயம்
அங்கிருக்கும் ஆபீசர்களைக் கண்டால் அதைவிட பயம்

பயங்களை வென்று
தைரியம் வரவழைத்து
நுழைகிற சில பொழுதுகளிலும்
அவர்களைப் பயமுறுத்தி பீதியடைய வைக்கும்
நுட்பங்கள் அனைத்தும் ஆபீசர்களுக்கு அத்துப்படி

அம்புட்டுக் கெட்டிக்கார ஆபீசர்களும்
அவர்களின் பெண்டு பிள்ளைகளும்
குப்பனும் சுப்பனும் வாழும் பகுதிகளுக்குள்
நுழையவே அடையும் பயம்
நடமாடும் போது அடைகிற பீதி

இரண்டுக்கும் ஏதும் தொடர்பில்லைதானே?!

3 கருத்துகள்:

  1. மிக்க நன்றி மேரி ஜோஸ் அவர்களே. இப்போதுதான் ஒருவர் புரியவில்லை என்று மிகக் கோபமாகத் திட்டினார். உங்கள் கருத்துரை வந்தபின் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது. :)

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...