வெள்ளி, ஜூலை 29, 2016

பட்டுக் கற்றல்

மீன் தராதே
தூண்டில் கொடு என்றான்
முதல் ஞானி

தூண்டிலும் கொடாதே
பிடிக்க மட்டும் கற்றுக்கொடு என்றான்
அடுத்த ஞானி

எவருக்கும் இழப்பில்லாமல்
கற்று மட்டும் கொடுக்க முயன்றபோது...

இலவசக்கல்வி
உன்னைத்தான் இளக்காரமாக்கும்
பட்டுக் கற்றலினும் சிறந்த பாடமில்லை
ஒதுங்கிக் கொள் என்றான்
இன்னொரு ஞானி

போங்கடா ஞானிகளா
நானும்
பட்டே கற்றுக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு
மீன்களை வாரிப் பங்கு போடத் தொடங்கிவிட்டேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...