ஞாயிறு, ஜூலை 31, 2016

பாதுகாப்பு

அன்னியர் நிறைந்த தொடர்வண்டியில்
இரவெல்லாம் 
தனியாகப் பயணிக்கப் போகும்
மகளின் பாதுகாப்பு பற்றி
எப்போதும் போல்
கவலையில் ஆழ்ந்திருந்தார் தந்தை

வண்டியேறும் வேளை
வந்தேறிய தோழனின் வருகை
எதிர்பாராமல் நிகழ்ந்தது எனினும்
மகளுக்குப் பாதுகாப்புக் கூட்டியிருப்பதாக எண்ணி
வழக்கத்துக்கு மாறான நிம்மதியோடு
வழியனுப்பி வைக்க உதவியது

வழியனுப்பி விட்டுத் திரும்புகையில்தான்
புதிதாக ஏதோ உரைத்தது

அன்னியர்களோடு பயணித்த நாட்களைவிட
அதிகம் பயப்பட வேண்டியது
இன்றுதானோ?!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...