சனி, ஜூலை 30, 2016

சரி

எப்போதும்
நான் நினைப்பதே
சரியென்று நம்புகிறேன்

குறைந்த பட்சம்
மற்றவர்களைவிடச்
சரிக்கு அருகாமையில்
இருப்பதாக நம்புகிறேன்

அவ்வப்போது
முன்பைவிட மேலும்
சரிக்கு அருகே
நெருங்கிவிட்டதையும்
உணர முடிகிறது

அப்படிச்
சரி நோக்கி நகர்கையில் எல்லாம்
என்னை விடச்
சரியைவிட்டு விலகி நிற்பவர்கள் என்று 
நான் எண்ணிக்கொண்டிருந்தவர்கள் பலரையும்
கடந்து தான் முன்னேறுகிறேன்

ஆனாலும்
இப்போதைக்கு
நானே
சரிக்கு மிக அருகாமையில்
இருப்பதாக உணர்கிறேன்

சரியுமே கூட
அவ்வப்போது
இடம் மாறித்தான் விடுகிறது

முன்பை விட
இப்போதெல்லாம்
வேகவேகமாகவே
இடம் மாறி விடுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...