வலியின் வலி

வலிபடுதலினும் பெருவலியல்லதான்

வலிபடுதலை
அருகிலிருந்து காண்தலும்
காணச் சகியாமல் துடித்தலும்

படுபவருக்கு
படுவலி
உடல்வலி

பக்கத்திலிருந்து பார்ப்பவருக்கு?

வலியின் வலியை
உணர்ந்திடப் போராடும் பாடும்
வலி போக்க முடியாத வழிப்போக்கனாக
உடன் கிடந்து வாடும் ஆற்றாமையும்
உயிர்வலி அல்லவா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கல்வி - கொள்கைகளும் கொள்ளைகளும்!

அற்புதமது

சாம, தான, பேத, தண்டம்