ஞாயிறு, ஜூலை 31, 2016

மேலானவன்

நான்
குறைபாடுகளுக்கும்
குற்றச்சாட்டுகளுக்கும்
அப்பாற்பட்டவனல்லன் என்பதை
நன்கறிந்தவனே

உங்கள் குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றிற்கும்
விளக்கமளிக்க வேண்டிய கடமை
எனக்கிருப்பதையும்
அதற்குரிய இடத்தில் நான் 
அமர்ந்திருப்பதையும்
நன்கறிவேன்

ஆனாலும்
குற்றஞ்சாட்டும் ஒவ்வொருவரும்
குறைகளுக்கு அப்பாற்பட்டவர்களில்லை என்பதாலே
என் வேலை 
எனக்கு எளிதாகிடுகிறது

பெரிய இடத்தில் அமர்ந்துகொண்டு
பெரும்பெருங் குற்றங்கள் புரிபவன் நான்

சிறிய இடத்தில் இருந்துகொண்டு
சிற்சிறு குற்றங்கள் புரியும் 
உம்மை அம்பலப்படுத்துவதற்கும்
உமக்கு
என்னைப் பற்றிச் 
சிந்திக்க நேரமில்லாமல் செய்து
உம்மைக் காத்துக் கொள்ளவே
போராடும் வகையில்
பார்த்துக் கொள்ளவும்
என் ஊழியர்களே போதும் எனும்போது
எதற்காக நான்
என் மேலான நேரத்தை
உமக்காக விளக்கமளிப்பதில்
வீணடித்துக்கொள்ள வேண்டும்?!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...