செவ்வாய், ஜூன் 14, 2016

மேதாவியர்

எம்மிடமில்லாத
உம் அறிவும் ஆற்றலும்
உம் மீது 
எப்போதும்
பிரம்மிப்பை ஏற்படுத்துகின்றன
ஆனால்
பிழைப்புக்காகக்
குற்றங்கள் இழைக்கும்
எளியவர் எம்மிலும் இழிவாக
உம் மேலான வாழ்வுக்காக
உலக நியாயங்களையெல்லாம்
உம் வசதிக்கேற்றபடி
வளைத்துப் போட்டுக் கொள்ளும்
உம் அறவுணர்வும்
உம் அறிவையும் ஆற்றலையும்
எவ்வளவோ பயன்படுத்தியும்
உம் உள்நோக்கங்களை
ஒளித்து வைத்துக் கொள்ள முடியாமல்
தடுமாறித் தவிக்கும்
வேளைகளில் வெளிப்பட்டுவிடும்
உம் இயலாமையும் போதும்
எம் மீதேறி
எம்புட்டு மேலே தாவிப் போனாலும்
மேதாவியர் உம்மைக் கீழே வீழ்த்த

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...