சனி, ஜூன் 04, 2016

கடைசி விடை

மனிதனுக்கு
பிரபஞ்சத்தைப் பற்றி
ஏகப்பட்ட வினாக்கள்
தன்னைப் பற்றி
அதை விட அதிகமான வினாக்கள்
விடையளிக்கப்படாத வினாக்களுக்கெல்லாம்
ஒரே விடையாய்
உயர்ந்து நிற்கிறார்
கடவுள்
வந்து சேரும்
ஒவ்வொரு விடையும்
அவரின் உயரத்தைக்
குறைக்க முயல்வதும்
எழுப்பப்படும்
ஒவ்வொரு புது வினாவும்
மீண்டும் அவரை
மேலே ஏற்றுவதுமாக
நீண்டுகொண்டே இருக்கிறது
விவாதம்
கடைசி வினாவும்
எழுப்பப்பட்டு
அதற்கான விடையும்
விளக்கப்படும் வேளையில்தானே
கடவுளுக்கும்
அறிவியலுக்கும்
வேலை முடியும்
அதற்குப் பின்னும்
மனிதனுக்கு மட்டுமா
வேலை இருந்துவிடப் போகிறது
பிரபஞ்சத்தில்?!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...