திங்கள், ஜூன் 13, 2016

காதல் முட்டை

காதலிப்பது உண்மையானால்
அதைக் காட்டிக்கொள்வதில்
என்ன தயக்கம் என்று
கூறுகெட்ட கேள்விகள் கேட்கும்
கூமுட்டைக் காதல்
குஞ்சும் பொறிக்காது
குழம்புக்கும் உதவாது

ஒன்று
உடனடியாக
உடைத்து வீசப்படும்
அல்லது
வீசப்பட்டு
வேறொரு வேளையில்
உடைபட்டு நொறுங்கும்

காதலும்
அதற்கான காலம் கனியும்வரை
அதீத கவனத்தோடு
அடைகாக்கப்பட வேண்டிய
உடைபொருள் என்ற
பண்பாட்டுச் சூட்சுமமறிந்த
பண்பட்ட காதல்தான்
காலங்கடந்து வாழும்
இனம் வளர்க்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...