சனி, ஜூன் 04, 2016

வரலாறு

உன் முன்னோர்கள் எல்லோரும்
நான் படித்த வரலாற்றில்
நாயகர்கள்
அவர்களை
அப்படிக் காட்டிய பெருமை
உன்னையே சேருமென்றார்கள்
அது எனக்குப் புரியவில்லை
நான் பார்த்த வரலாற்றில்
பலருக்கு நீ நாயகன்
பலருக்கு நீ பாவி
உன் காலம் முடிந்தபின்
என் பிள்ளைகள் படிப்பதற்காக
எழுதப்பட்ட வரலாற்றில்
நீயும்
கேள்விகட்கப்பாற்பட்ட நாயகனாக
உயர்ந்து நிற்கிறாய்
அவர்கள் படிக்கும் வரலாற்றை
நான் பார்த்த வரலாறு கொண்டு
கேள்விக்குட்படுத்த விரும்புகிறேன்
ஆனாலும்
அதற்கெல்லாம் எங்கே
நேரமிருக்கிறது?
இருந்தாலும்
இதெல்லாம்
நான் படித்த வரலாற்றையும்
கேள்விக்குட்படுத்த உதவியிருக்கிறது
நன்றி நாயகா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...