நாய்கள் மட்டுமா?

ஊரெல்லாம் வெள்ளம் போனாலும்
நாய் நக்கித்தான் குடிக்கும் என்கிறீர்களே

உங்களுக்கு நன்றாகத் தெரியுமா?

அங்கே
நக்கிக் குடித்துக் கொண்டிருப்பவை அனைத்தும்
நாய்கள்தாம் என்று

நக்கிக் குடிப்பதனாலேயே
அவை நாய்கள்தாம் என்று
உறுதியாகச் சொல்கிறவர்களே!

ஒருமுறை உற்றுப் பாருங்கள்
அவற்றுள்
பசித்தாலும் புல் தின்ன மாட்டோம்
என்று சொல்லிக் கொள்ளும்
புலிகளும் சிங்கங்களும்கூட
நாய்களைவிட
நன்றாகவே நக்கிக் குடித்துக் கொண்டிருக்கின்றன!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்