புதன், ஜூன் 01, 2016

பலசாலி

தனி ஆளாக
நாலு பேரைக் கூடச்
சாய்த்து விடுவார்
கருப்புச் சித்தப்பா

எவருக்கும் பயப்படாத
ஏட்டையா கூட
அவரைக் கண்டால்
பயப்படுவார்

அவரைவிடப் பலசாலி
எவரையும் நான்
இதுவரையும் கண்டதில்லை

முரட்டுப் பூனைக்கு
மணி கட்டப் போகும்
மணிகண்டன் யாரோ என்று
ஊரே காத்துக் கிடந்தது

சித்தப்பா
இன்று
வீடு திரும்பி வந்து
கதவைப் பூட்டிக் கொண்டு
கதறிக் கதறி அழுகிறார்

போன வருடம்
வெளியூரிலிருந்து
வேலைக்காக வந்து குடியேறிய
ரமேஷ் சார்
தன்மையானவர்
பயந்த சுபாவம்
எப்போதும் சிரித்த முகம்
யாரோடும் அதிர்ந்துகூடப் பேச மாட்டார்

எங்கோ
ஏதோ
எழுதிப் போட்டு
இவருக்கும்
இவர் போலப் பலருக்கும்
வேலையே இல்லாமல் செய்து விட்டாராம்...
தனி ஆளாக...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...