புதன், ஜூன் 01, 2016

காஸ்ட்லி ஆசை

இளையவன்
அது வேண்டுமென்று கேட்டு
இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன

இந்த மாதமும்
கையைக் கடிப்பதால்
அடுத்த மாதச் சம்பளம் வரை
காத்திருக்க வேண்டும் போல் தெரிகிறது

வேலைக்காரம்மா வீட்டு இளையவனும்
அது வேண்டுமென்று கேட்டு
அடம் பிடித்தழுதான் அன்று

அவரோ
மூத்தவன்
படித்து முடித்து
வேலைக்குப் போய்
முதல் மாதச் சம்பளத்தில்
வாங்கிடலாம் என்று
சொல்லித் தேற்றிவிட்டார்

எங்கள் வீட்டு மூத்தவனைப் போலவே
இரண்டு வருடந்தான் மூத்தவன்
அவனும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...