வியாழன், ஜூலை 07, 2011

இது உங்கள் கவனத்திற்கு...

சொல்ல வேண்டியது நிறைய இருக்கிறது...
பேருந்தில் நடந்த பிக் பாக்கெட்
உணவகத்தில் கண்ட சண்டை
ஞாயிற்றுக் கிழமைத் திரைப்படம்
பேசிக் கொண்டே போகிறேன்...
தலையை ஆட்டினாயே தவிர
எதையும் கவனித்ததாய்த் தெரியவில்லை!

உன்னிடமும் நிறைய இருக்கின்றன போலும்...
அலுவலக அரசியல்
குடும்பப் பயணம்
கோயில்த் திருவிழா
பேசிக் கொண்டே போகிறாய்...
நான் கவனித்தேனா
என்பதைக் கூட கவனியாமல்!

பாவம்தான் நீயும்...
என்னைப் போலவே!

* 2007 வாக்கில் கிறுக்கித் தொலைத்தது...

2 கருத்துகள்:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...