ஞாயிறு, ஜூலை 17, 2011

காலம் கடந்த பாடங்கள்!

தொட்டால் சுடும்
பட்டால் வலிக்கும்
தின்றால் கசக்கும்
திருடினால் அடி விழும்
திணை விதைத்தால் என்ன வளரும்
சோம்பல் சோறு போடாது
உழைத்தால்தான் கஞ்சி
ஓடினால் உடலுக்கு நலம்
குடித்தால் குடலில் புண்
நனைந்தால் காய்ச்சல்
நகைத்தால் நாகரிகம்
வாசித்தால் அறிவு வளரும்
வாய்க்கொழுப்பு வம்புக்கு வழி...

சொல்வது கேட்டும்
கேளாது பட்டும்
தெரிந்து கொண்டோம்
திருத்திக் கொண்டோம்!

பள்ளியில் படிக்காததால்
பிடித்த பெண்ணைப் பிடிக்காததால்
மயிரிழைப் பிழையால் உயிரிழந்ததால்
கிடைத்தும் பயன்படப் போகாத
காலம் கடந்த படிப்பினைகள்தாம்
எத்தனை எத்தனை?!

* 2007 வாக்கில் கிறுக்கித் தொலைத்தது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...