மன்னர் உள்ளே நுழையும் போதே அமைச்சர் சீவலப்பேரியாரின் பக்கம் திரும்பி: "அய்யர்வாள்! பாண்டியர்கள் ஏன் கொற்கையிலிருந்து கூடலுக்கு மாறினார்கள் என்ற தெளிவான விளக்கங்கள் உம்மிடம் இருக்கின்றனவா? அப்புறம் ஏன் தென்காசிக்கு மாறினார்கள்? இது பற்றியெல்லாம் இன்று இரவுக்குள் படித்து வந்து சொல்ல முடியுமா?" "கேள்விப்பட்டேன் அரசே! உங்கள் மனதில் ஓடும் குழப்பம் பற்றிக் கேள்விப்பட்டேன். நல்ல யோசனைதான். நாம் இப்போதே அனைத்தையும் மாற்ற வேண்டியதில்லை. இரண்டு தலைநகரங்கள் வைத்துக்கொள்வோம்." "அதுவும் உம் காதுக்கு வந்துவிட்டதா? கெட்ட காதய்யா உமக்கு!" "நல்ல காதென்று சொல்லும் அரசே!" அமைச்சரின் முகத்தில் அதே வழக்கமான பெருமிதப் புன்னகை. * ஆனால் அங்கிருக்கிற அரண்மனை அவ்வூர்க்காரர்களுக்குத் தம் ஊரும் ஒரு தலைநகர வரலாறு உடையதுதான் என்ற நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. எட்டயபுரத்து ஜமீனின் வடக்கு எல்லையாக இருந்ததால் இங்கும் ஓர் அரண்மனை கட்டினாராம் எட்டயபுரத்து மன்னர். முதலில் இரட்டைத் தலைநகரங்கள் வைத்துக்கொள்ள விரும்பித்தான் நாலாரத்தில் அரண்மனை கட்டினாராம். 12 மைல் தொலைவுக்கு அங்
இடுகைகள்
ஏப்ரல், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது