இடுகைகள்

ஜூன், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கலாச்சார வியப்புகள் - மீண்டும் இங்கிலாந்து - 2/9

படம்
கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! வியப்புகள் தொடர்கின்றன... வெஸ்ட்மின்ஸ்டர்  கிரீன் பார்க்கும் பக்கிங்காம் அரண்மனையும் இருப்பது வெஸ்ட்மின்ஸ்டர் என்னுமிடத்தில். அங்குதான் இங்கிலாந்தின் பாராளுமன்றமும் பல தூதரகங்களும் கூட இருக்கின்றன. முதன்முறை டெல்லி சென்ற போது, பாராளுமன்றம், குடியரசுத் தலைவர் மாளிகை போன்ற தொலைக்காட்சியில் மட்டும் பார்த்திருந்த பல கட்டடங்களை நேரில் பார்த்த போது, ஒருவித சிலிர்ப்பு உண்டானது. அதைப் போன்ற ஓர் உணர்வு பக்கிங்காம் அரண்மனையைப் பார்க்கும் போதெல்லாம் உண்டானது. அந்தப் பகுதியில் நடமாடும் போது ஓர் அதீத பாதுகாப்பு உணர்வையும் உணர முடி