இடுகைகள்

மே, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி (1/3)

படம்
சிங்கப்பூர் வரும் போது எண்ணி எண்ணி மகிழ்ந்த ஒன்று - தமிழுடனான என் உறவை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வசதியான ஒரு வெளிநாட்டுக்குச் செல்கிறோமே என்பதுதான். பெங்களூரில் தமிழ் கற்க முடியாத என் மகள் இங்கு வந்து ஆனா ஆவன்னாப் படிக்க முடியும். தமிழர்கள் தம் சொந்த மண்ணை விடக் கண்ணியமான வாழ்க்கை வாழ்கிறார்கள் இங்கு. தமிழ் நாட்டில் பல ஊர்களில் கிடைக்காத வசதி இங்கே கிடைக்கிறது. அப்படியான ஒரு வசதி - பகுதிக்கு ஒரு நூலகம் இருக்கிறது. ஒவ்வொரு நூலகத்திலும் ஒரு பகுதி தமிழுக்கென்று ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். இதை அறிந்ததும் எப்படியும் நூலகத்தில் உறுப்பினராகி விட வேண்டும் என்று முடிவு செய்து அதையும் செய்து விட்டேன். முதல் முறை உள்ளே நுழைந்த போது என்னென்ன நூல்கள் இருக்கின்றன என்பதைக் கண்டு மகிழ்வதிலேயே இரண்டு மணி நேரம் போய் விட்டது. ஆனாலும் தமிழின் தலை சிறந்த நூல்கள் என்று அறியப்படும் எதுவும் சிக்க வில்லை. அந்நூல்களே அங்கு இல்லையா அல்லது அவை அனைத்தும் எடுத்துச் செல்லப் பட்டுள்ளனவா என்று தெரியவில்லை. இருந்த நூல்களில் நன்கு கேள்விப் பட்ட ஒன்று - குறிஞ்சி மலர். குறிஞ்சி மலர் பற்றி எப்படித் தெரியும் என்பத

கலாச்சார வியப்புகள்: இலண்டன் - 4/12

படம்
கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! தொடர்ச்சி... ஒவ்வொரு அறையிலும் ஹீட்டர் இருந்தது. ஆனாலும் குளிர் குத்திக் கிழித்தது. மகளுக்குப் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. படுத்துத் தூங்கி விட்டாள். மனைவி குளிரில் துடித்தாள். 'அய்யய்யோ, எல்லோரும் சொன்னது போல தப்புப் பண்ணி விட்டோமோ?!' என்று கிறுகிறுக்க ஆரம்பித்தது. யாருமே கிளம்பும் போதே குடும்பத்தோடு கிளம்புவதில்லை. போய் செட்டில் ஆகி மூச்சு விட முடிந்த பின்தான் குடும்பத்தை அழைத்துச் செல்வார்கள். நாங்களோ ஒரு மாத வேலை மட்டுமே உறுதியாகி இருந்த வேளையில், 'எந்தச் சிரமமாக இருந்தாலும் சேர்ந்து அனுபவித்து விட்டு