இடுகைகள்

பயணம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புயலிலே ஒரு தோணி: இலக்கிய உலகத்தின் கரை சேராத கப்பல்

புயலிலே ஒரு தோணி: இலக்கிய உலகத்தின் கரை சேராத கப்பல் தமிழில் எழுதப்பட்ட மிகச் சிறந்த புதினங்களில் ஒன்று என்று சொல்லப்படும் ஒரு நூலைப் பற்றிப் பலரும் பேசிக் கேட்டதில்லை என்பது வியப்பான முரண். அந்தப் புதினத்தை எழுதியவரைப் பற்றித் தேடினால், புதினத்தைவிட வியப்பான வாழ்க்கை ஒன்று நம் முன்னால் விரிகிறது. ப. சிங்காரம் எழுதிய புயலிலே ஒரு தோணி அப்படிப்பட்ட ஒரு நூல். அதன் ஆசிரியரின் வாழ்க்கையும், அவர் எழுதிய புதினத்தின் இலக்கியச் செறிவும், தமிழ் இலக்கிய உலகம் எதை நினைவில் வைத்துக்கொள்கிறது, எதை மறந்துவிடுகிறது என்ற கேள்வியை எழுப்புகின்றன. தமிழ்நாட்டில் இலக்கிய வாசிப்பு ஒரு புறம் என்றால், இலக்கியம் சார்ந்த சந்திப்புகளும் செயல்பாடுகளும் இன்னொரு புறம் படு சுறுசுறுப்பாக நடந்துகொண்டே இருக்கின்றன. இலக்கிய வாசிப்பு என்பதே மிகச் சிறுபான்மையான ஒரு கூட்டத்தின் வேலையாக இருப்பதால், அவர்களில் பெரும்பாலோர் ஒரு குழுவாகக் கூடிக் கும்மாளம் போடுவது இயல்பான ஒன்றுதான். அந்தப் பத்துப் பேரே பல குழுக்களாகப் பிரிந்து அடித்துக்கொள்வது வேறொரு கதை. அதுவும் ஒரு போதைதான். அந்தக் கூட்டத்துக்குள் வராமலேயே, காலம் முழுக்கத் தன்...

யாதும் ஊரே: அமேரிக்கா 4

முதல் பாகம் அமேரிக்கா பற்றி, இரண்டாம் பாகம் கலிஃபோர்னியா மாநிலம் பற்றி, மூன்றாம் பாகம் லாஸ் ஏஞ்சலஸ் பற்றி என்றால், நான்காம் பாகம் எது பற்றி இருந்துவிடப் போகிறது! அதேதான். லாஸ் ஏஞ்சலசில் எந்தப் பகுதியில் வாழ்கிறோம் என்பது பற்றிப் பேசிவிடுவோம் இப்போது. அத்தோடு பொதுவாகவே அமேரிக்காவில் வாழும் இந்தியர்கள் பற்றி நிறையக் கதைகள் உண்டு. அவை பற்றியும் பேசிவிடுவோம். நாங்கள் வீடு பிடித்துத் தங்கி இருக்கும் இடத்தின் பெயர் 'டாரன்ஸ்'. டாரன்ஸ் என்பது லாஸ் ஏஞ்சலசில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்று. இது போலப் பல பகுதிகள் இருக்கின்றன. பொதுவாகவே இங்கே இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதி எல்லாமே நல்ல பள்ளிகளைக் கொண்டிருக்கின்றன. நம்மவர்கள் நல்ல பள்ளிகள் உள்ள இடங்களைத் தேடி அடைவதும் உண்டு. நம்மவர்கள் குடியேறிய உடனேயே பள்ளிகளின் தரம் கூடிவிடுவதும் உண்டு. இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு நம்மூரில் கல்விக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தோமா என்று தெரியவில்லை. ஊருக்கு இரண்டு வீடுகளோ சிறிது பெரிய ஊராக இருந்தால் ஓரிரு தெருக்களோதான் நன்றாகப் படிக்கும் பிள்ளைகள் கொண்டிருக்கும். ஆனால் ஒழுங்கா...

யாதும் ஊரே: அமேரிக்கா 3

முதல் பாகத்தில் அமேரிக்கா பற்றியும் இரண்டாம் பாகத்தில் கலிஃபோர்னியா மாநிலம் பற்றியும் பார்த்தோம். அதிலேயே நாங்கள் வந்திறங்கியிருக்கும் நகரமான லாஸ் ஏஞ்சலஸ் பற்றியும் ஓரளவு பார்த்தோம் எனினும், இந்தப் பாகத்தில் அது பற்றி இன்னும் விரிவாகப் பார்த்துவிடுவோம். ஆங்கிலப் பெயர்களைத் தமிழில் வேறு மாதிரி எழுதும் பழக்கம் இருப்பது இதற்கும் பொருந்தும். தமிழில் எழுதுகிற எல்லோருமே இந்த நகரத்தை 'லாஸ் ஏஞ்சல்ஸ்' என்றுதான் எழுதுகிறோம். சொல்வதும் கூட அப்படியே. அது 'ஏஞ்சல்ஸ்' அல்ல, 'ஏஞ்சலஸ்'. 'ல்' அல்ல, 'ல'. இங்கே உள்ள எல்லா மாநிலங்களுக்குமே இரண்டெழுத்தில் ஒரு சுருக்கப் பெயர் இருக்கும். 'நியூ யார்க்' என்றால் 'NY'. 'நியூ ஜெர்சி' என்றால் 'NJ'. 'கலிஃபோர்னியா' என்றால் 'CA'. இப்படி ஐம்பது மாநிலங்களுக்கும் ஒவ்வொரு சுருக்கப் பெயர் உண்டு. நம்மூரில் வாகனப் பதிவு எண்ணுக்கு முன்னே TN, KA, KL என்று இருப்பது போல். ஆனால் இங்கே அஞ்சல் துறை உட்பட எல்லோராலும் முழுமையாக இந்த இரண்டெழுத்துச் சுருக்கப் பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதில்...

யாதும் ஊரே: அமேரிக்கா 2

சென்ற பாகத்தில் அமேரிக்கா பற்றிய அறிமுகத்தையே முடிக்கவில்லை. அதை முடித்துவிட்டுத்தானே அமேரிக்காவில் எங்கே வந்து இறங்கினோம் என்பதைப் பற்றிப் பேச முடியும்! அமேரிக்கா என்றாலே நமக்கு முதலில் கண்ணில் வருவது அந்தச் சுதந்திர தேவி சிலையும் அங்கே தென்படும் குளிருக்கான பல அறிகுறிகளுமே, இல்லையா? பனி சொட்டும் மரங்கள், குளிருக்கு உடலை முழுக்க மறைத்து உடையணிந்து நடமாடும் மனிதர்கள், அவர்களின் தலைகளில் இருக்கும் குல்லா ஆகியவைதானே! ஆனால் அது மட்டும் அமேரிக்கா இல்லை. அமேரிக்கா என்பது ஒரு பரந்து விரிந்த பெரும் நிலப்பரப்பு. இந்தியாவை எப்படித் துணைக்கண்டம் என்கிறோமோ அது போலவே இதுவும் ஒரு துணைக்கண்டம்தான். நிலப்பரப்பில் இந்தியாவைவிடப் பல மடங்கு பெரிய நாடு. பருவநிலைகளும் நில அமைப்பும் கூட இந்தியாவைவிடப் பல மடங்கு விதவிதமானது. ஆனால் இந்தியா போல் பரந்த பண்பாடுகளைக் கொண்ட நாடு என்று சொல்ல முடியாது. அதனால் அமேரிக்கா ஒரு துணைக்கண்டம் என்று சொல்வதைத் தாங்கிக்கொள்ள முடியாது போகலாம் உங்களுக்கு. இங்கேயும் உலகெங்கும் இருந்து வந்து வாழும் பல்வேறு இனக்குழுவினர் - மொழியினர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நம்மைப் போ...

யாதும் ஊரே: அமேரிக்கா 1

இவ்வளவு நாட்களாக பயணக்கட்டுரைகளை 'கலாச்சார வியப்புகள்' என்ற பெயரில் எழுதிக்கொண்டிருந்தேன். அவற்றையெல்லாம் தொகுத்து மின்நூலாகவும் வெளியிட்டாகிவிட்டது. காலம் கடந்து, அந்தப் பெயர் சலித்துப்போய் இருக்கிறது இப்போது. அதனால் இதுமுதல் பயணக்கட்டுரைகளுக்கு 'யாதும் ஊரே' என்று பெயர் மாற்றிக்கொள்ளலாம் என்று எண்ணுகிறேன். நூலின் அடுத்த பதிப்புக்கும் இதே பெயரை இட்டுக்கொள்ளலாம் என்றும் எண்ணுகிறேன். எப்படி இருக்கிறது புதிய பெயர்? 'அமெரிக்கா'வை எல்லோரும் சொல்வது போல 'அமெரிக்கா' என்று சொல்லாமல் ஏன் 'அமேரிக்கா' என்று சொல்ல வேண்டும்? உண்மை என்னவென்றால், தமிழில்தான் அப்படி 'அமெரிக்கா' என்று எழுதுகிறோம். எழுதுவது மட்டுமே அப்படி. பேசும்போது கூடப் பெரும்பாலானவர்கள் 'அமேரிக்கா' என்றுதான் சொல்கிறோம். சிறு வயதில் 'அமேரிக்கா' என்று சொல்வது சிறிது பட்டிக்காட்டுத்தனமாக இருக்கிறது என்று எண்ணி, எழுதுவது போலவே 'அமெரிக்கா' என்று கவனமாக மாற்றிச் சொல்லப் பழகிக்கொண்டோம் என்கிற நினைவும் வருகிறது இந்த வேளையில். பின்னர் அதையே 'யூ. எஸ்.' என்...

கலாச்சார வியப்புகள் - மும்பை

கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! இந்தியாவின் தலைநகரம் டெல்லியாக இருந்தாலும் இந்தியாவிலேயே மிகப்பெரிய நகரம் – இந்தியாவின் வணிகத் தலைநகரம் எனப்படுவது மும்பைதானே. இந்தியா வருகிற பயணி ஒருவர் ஒரேயொரு நகரத்தைத்தான் பார்க்க முடியும் என்றால் அவர் பார்க்க வேண்டியது மும்பைதானே. சிறு வயது முதலே மும்பை (அப்போது பம்பாய் அல்லது பாம்பே) என்றால் நமக்கொரு பிரம்மாண்டம் இருக்கும். வேலைக்கு வந்த பின்பு மும்பையில் இருந்து பணி நிமித்தமாக பெங்களூர் வரும் சகாக்கள் அனைவரும் பெங்களூரை மும்பையோடு ஒப்பிட்டுச் சொல்லும் பல கருத்துகள் மும்பை மீதான ஆர்வத்தை மேலும் கூட்டத்தான் செய...