இடுகைகள்

எழுத்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நேர்காணல்: தட்பவெப்ப மாற்றத்தின் புதினங்கள், வணிகம் மற்றும் சமூகவியல் பற்றி அமிதவ் கோஷ்

நேர்காணல்: தட்பவெப்ப மாற்றத்தின் புதினங்கள், வணிகம் மற்றும் சமூகவியல் பற்றி அமிதவ் கோஷ் ‘தட்பவெப்ப மாற்றப் புனைவுக்கென்று தனி வகைமை இருக்கும் போது, அது அன்றாட வாழ்க்கையின் தீவிரத்தோடு தொடர்பில்லாத தனியான ஒன்றாகிவிடுகிறது. ஆனால் அது நம் அன்றாட வாழ்க்கையோடு முற்றிலும் பின்னிப் பிணைந்துள்ள ஒன்று.’ அமிதவ் கோஷ், தன் புதிய கட்டுரைத் தொகுப்பு நூலான, த கிரேட் டிரேஞ்ஜ்மெண்டில் (The Great Derangement), இன்றைய தட்பவெப்ப நெருக்கடியின் வடிவத்தில் மனித குலத்தை அதன் இன்றைய இக்கட்டான நிலைக்கு இட்டு வந்துள்ள கதை சொல்லல், வரலாறு, அரசியல் ஆகியவற்றின் தோல்விகள் பற்றி ஆய்வு செய்கிறார். அந்த மெல்லிய தொகுதியின் வீச்செல்லை பரந்து விரிந்ததாக இருக்கிறது: மற்ற எத்தனையோ விஷயங்களுக்கு நடுவில், பொதுப்போக்குப் புதினங்களில் (mainstream novel) இயற்கையிலிருந்து தன்னை வேறாகப் பார்க்கும் நிலைக்கு மனிதகுலத்தைத் தள்ளிய கர்டீசிய இருமைவாதத்தின் விளைவுகள் பற்றி ஆராய்கிறார்; தட்பவெப்பப் பேரழிவைத் தன் குடும்பமே எப்படி எதிர்கொண்டது என்ற கதையைச் சொல்கிறார்; புயல் எழுச்சி ஏற்பட்டால் மும்பை போன்ற கடலோரப் பெருநகரத்துக்கு என்ன ஆகும்...

கடிதக் கிறுக்கு

படம்
பெங்களூர் வருவதற்கு முன்பு வரை கடிதம் எழுதும் பழக்கம் கடுமையாக இருந்தது. கடிதத்தையும் எழுதிவிட்டு, அதை நாட்குறிப்பிலும் ஏற்றி விடுவேன். இன்னின்னார்க்கு இன்று கடிதம் எழுதினேன் என்று. கிட்டத்தட்ட இரண்டு-மூன்று  நாட்களுக்கு ஒருமுறை கடிதமும் பேனாவுமாக உட்கார்ந்து விடுவேன். நமக்குத்தான் படிப்பதைத் தவிர எல்லாம் பிடிக்குமே. அதனால் படிக்க வேண்டிய காலத்தில் அதில் இருந்து தப்பித்துக் கொள்ள வைத்திருந்த டெக்னிக்குகளில் இதுவும் ஒன்றாக இருந்தது. வேலைக் கிறுக்கு பிடித்த பின் கடிதம் எழுதுதல் மெது-மெதுவாகக் குறைந்து போய் விட்டது. அத்தோடு சேர்ந்து மின்னஞ்சல் வேறு வந்து அதற்கான தேவையை இல்லாமலே செய்து விட்டது.  அப்புறம்தான் எதுவாக இருந்தாலும் அப்போதே பேசித் தீர்த்துக் கொள்ள வசதியாக ' செல்' லப்பன் வந்து விட்டானே! இந்தப் பழக்கம் எப்போது ஆரம்பித்தது என்று பார்த்தால், அது பள்ளிப் பருவத்திலேயே ஆரம்பித்து விட்டது.  உறவினர்களோடும் நண்பர்களோடும் தொடர்ந்து தொடர்பில் இருப்பது ஒரு பெரிய நற்பண்பாகவும் வெற்றி பெற்றவர்களில் பழக்கமாகவும் மனதில் பதிந்து விட்டதன் விளைவு. காந்தி கடிதம் எழுதுவா...

தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் - 6/6

படம்
தொடர்ச்சி... "பதிமூனில் ஒண்ணு" கதையில் பள்ளியில் இடம் வேண்டிக் காத்திருக்கும் மாணவர்கள் பற்றியும், நல்ல ரிசல்ட் காட்ட வேண்டும் என்று மாணவர்களைச் சல்லடை போட்டு வடிகட்டிக் கொடுமை செய்யும் பள்ளிகள் பற்றியும் பேசப்படுகிறது. எப்படியும் இடம் பெற்று விட வேண்டும் என்று கெஞ்சிக் கூத்தாடி, காத்துக் கிடந்து, கடைசியில் சாதித்து விடும் ஒரு மாணவனின் கதை. அப்படி வந்து காத்திருக்கும் பதிமூனு மாணவர்களில் பனிரெண்டு பேர், வாழ்க்கையை வெறுத்து, நம்பிக்கை இழந்து, மறுநாள் வராததால், நம்ம நாயகனுக்கு இடம் கிடைத்து விடும். ஆனால், அந்த ஒருநாட் கூத்தை மட்டும் பேசுவதில்லை கதை. கிட்டத்தட்ட அவனுடைய பள்ளி வாழ்க்கையே அலசி ஆராயப்படுகிறது. அது அவனுடைய கதை மட்டுமல்ல. தமிழ் நாட்டில் உள்ள முக்கால்வாசிப் பள்ளிப் பையன்களின் கதை. ரிசல்ட் பைத்தியம் பிடித்த பள்ளிகளின் - அவற்றின் நிர்வாகத்தின் - தலைமையாசிரியர்களின் - ஆசிரியர்களின் - பெற்றோர்களின் கதை! மற்ற எல்லாப் பாடங்களிலும் குட்டிக் கரணம் போட்டுத் தப்பி விடுபவன், சுட்டுப் போட்டாலும் கணக்கும் ஆங்கிலமும் வராது தவிப்பான் பாவம். இந்தக் காம்ப...

தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் - 5/6

படம்
தொடர்ச்சி... "உபரி" என்ற கதையில் கணக்குத் தெரியாமல் கொஞ்சம் மிஞ்சி விடுகிற பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று பலவற்றை நினைத்துக் குழம்புகிறார் நம் கீழ் நடுத்தர வர்க்கத்துக் கதை நாயகர். தான் நீண்ட காலமாக ஆசைப் பட்டுச் செய்ய முடியாமல் போன பல செலவுகள் பற்றி யோசிக்கிறார். ஒவ்வொன்றாக மனதில் வந்து செல்கின்றன. உடல்நலம் குன்றிய மனைவிக்கு மருந்து மாத்திரை வாங்கிக் கொடுக்கலாம் என்று எண்ணுகிறார். தம் பிள்ளைகள் அதிகம் ஆசைப்படும் தின்பண்டம் ஏதாவது வாங்கிக் கொடுக்கலாம் என்று விரும்புகிறார். அவருடைய மனதில் வந்து செல்லும் ஒவ்வொரு ஆசையும் மிக நியாயமானவை-உணர்வு பூர்வமானவை. நாமெல்லாம் நினைப்பதற்கு முன்பே செலவு செய்து விடக் கூடியவை. அவ்வளவு குழப்பத்தில் குரங்கு போல ஒன்றில் இருந்து ஒன்றாகப் பல ஆசைகளுக்குத் தாவி, இப்படிச் செய்யலாம் என்று ஒரு முடிவுக்கு வரப் போகும் நேரத்தில், நீண்ட காலமாக மாற்றப் படாமல் பிய்ந்து கிடக்கும் பாத்ரூம் வாளியைப் பார்க்கிறார். அதைப் பார்த்துப் பரிதாபப் பட்டு இறுதியில் வாளியையே மாற்றி விடலாம் என்று முடிவு செய்வார். இதுவும், ...

தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் - 4/6

படம்
தொடர்ச்சி... "அப்பாவின் பிள்ளை" என்கிற கதையும் நம்மில் பலருக்கு எளிதில் சட்டென உரைக்கும் விதமானது. தினமும் வேலைக்குச் சென்று வரும் அப்பா எப்போதும் சிடுமூஞ்சியாகவே இருப்பார். வேலை முடிந்து வீடு திரும்புகையில், இரவில் எப்போதுமே கதவை ஓங்கி ஓங்கித்தான் தட்டுவார். அதனால் அவருடைய மகனான நம் கதைத் தலைவனுக்கு அவரைக் கண்டாலே பிடிக்காது. இப்படியிருக்கையில், இவனும் ஒரு நாள் வேலைக்குப் போக ஆரம்பிப்பான். அப்படி வேலைக்குப் போன முதல் நாளே அவனை நாயாய்ப் படுத்தி, சக்கையாய்ப் பிழிந்து எடுத்து விடுவார்கள். அத்தனை அலைக்கழிப்புகளையும் தாங்கிக் கொண்டு வீடு திரும்பி, அன்றிரவு இவனும் கதவைத் தட்டும் சூழ்நிலை வரும். இவனும் தனக்குப் பிடிக்காத தந்தை போலவே ஓங்கி ஓங்கிக் கதவைத் தட்டுவான். அப்போதுதான் உணர்வான் - "நம்மளும் அப்பா மாதிரியா அப்ப?" என்று. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறார்கள். அதற்கான நியாயங்களை அவர்களுடைய வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தால் ஒழிய நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்கிற தத்துவத்தைச் சொல்லாமல் சொல்லும் கதை இது. இன்னொன்று, வேலைக்குச் ...

தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் - 3/6

படம்
தொடர்ச்சி... மீடியம் என்ற கதை, கீழ்நடுத்தர வர்க்கத்து மனிதர்களின் பொருளியற் சிக்கல்களைச் சிறப்பாகச் சொல்கிறது. விபரம் தெரிந்த காலத்தில் இருந்து அண்டர்வேர் அணிந்து கொண்டிருந்த ஆள், குற்றாலம் போகையில் எல்லோரும் பார்த்துச் சிரிப்பதால், அவமானப் பட்டு தானும் நவ நாகரிக சமூகத்தின் ஒரு பங்காகி விட வேண்டும் என்று விரும்பி ஒரு ஜட்டி வாங்குகிறார். இன்னொரு ஜட்டி வாங்கக் காசு இல்லாமல் ஒரே ஜட்டியைத் தினமும் போடுகிறார். கொஞ்ச காலம் போனதும், அவருடைய வண்டவாளம் வெளியே தெரிய ஆரம்பித்து விடுகிறது. பிடுங்கி எடுக்கும் நாற்றத்தால் புதியதோர் அவமானத்துக்கு உள்ளாகிறார். அதிலிருந்து தப்பிப்பதற்காக, பிச்சை எடுக்காத குறையாக நண்பர் ஒருவரிடம் கடன் வாங்கிக் கொண்டு மாற்று ஜட்டி வாங்கப் போகிறார். போகிற இடத்தில் அவர் வைத்திருக்கும் காசுக்கு ஜட்டி இல்லை என்று சொல்லி விடுகிறார்கள். அதை விடக் குறைந்த விலைக்கு ஏதாவது கிடைக்குமா என்பதை மிக நாகரிகமாக, "மீடியம் ரேட்டில் ஏதாவது இல்லையா?" என்பார். இருப்பதிலேயே குறைந்த விலை ஜட்டியை எடுத்துப் போட்ட கடைக்காரன் தன்னைப் பார்த்து ஏளனப் பார்வை பார...

ஜெயகாந்தன் பற்றிய ஆவணப் படம்

படம்
ஜெயகாந்தனின் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' படித்து விட்டு அது பற்றி ஓர் இடுகை போட்டேன். அதற்குக் கருத்துரையாக தோகா டாக்கீஸ் என்கிற நண்பர் இந்தக் காணொளிகளின் இணைப்பைக் கொடுத்துப் பார்க்கச் சொன்னார். அனைத்துப் பாகங்களையும் இரவோடு இரவாக ஒரே மூச்சாக உட்கார்ந்து பார்த்து முடித்தேன். தமிழகம் கொண்டாட வேண்டிய - ஓரளவு கொண்டாடி விட்ட - ஒரு மாபெரும் படைப்பாளியை, அவருடைய அன்றாடத்தில் எப்படி இருக்கிறார் என்று மிக அருகாமையில் காட்டியிருப்பதன் மூலம் இந்த ஆவணப் படம் மிகப் பெரும் சாதனையைச் செய்திருக்கிறது. நன்றி, ரவி சுப்பிரமணியன் அவர்களே! வரலாற்றில் ஒரு வரியில் இடம் பெற்று விட்டீர்கள்!! மொத்தத்தில் ஆவணப் படம் அருமையோ அருமை. ஆனால், பாகங்களாகப் போடப்படும் காணொளிகளுக்கே உரிய பிரச்சனையை இந்தத் தொடரும் சந்தித்திருக்கிறது. முதல் பாகத்தில் ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்திருக்கிறது பார்த்தவர்களின் எண்ணிக்கை. ஒரே படமாகப் போட்டிருந்தாலும் பாதியில் போபவர்கள் போகத்தான் செய்திருப்பார்கள். அது தெரிந்திருக்காது நமக்கு. அவ்வளவுதானே! :) 1 முதல் 7 வரை 9 பாகங்கள் போட்டிருக்கிறார்கள். அதெப்படி என்க...

தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் - 1/6

படம்
வார இதழ்களில் வரும் ஓரிரு கதைகள் தவிர்த்து முழுமையாகச் சிறுகதைகள் அடங்கிய நூல் என்று படிக்க ஆரம்பித்தது தமிழ்ச்செல்வன் மற்றும் கோணங்கி ஆகியோருடையவற்றையே. பள்ளிக்கூடத்தில் படித்த நூல்களைப் போலவே அவற்றில் எவ்வளவைப் புரிந்து படித்தேன் - எவ்வளவைச் சம்பிரதாயமாகப் படித்தேன் - எவ்வளவை அவர்களுடனான உறவின் காரணமாகப் படித்தேன் என்பதெல்லாம் வேறு கதை. அவர்கள் என் உறவுக்காரர்கள் என்பதைத் திரும்பத் திரும்ப எழுதுவதே கூட ஒருவிதமான அசௌகரியமாகவே இருக்கிறது. கூட்டம் சேர்ப்பதற்காகவோ நானும் அவர்களுடைய ஆள் என்று காட்டிப் பெருமைப் பட்டுக் கொள்ளவோ விருப்பம் அதிகமில்லை ( எண்ணிப் பெருமைப் பட்டுக் கொள்வது எப்போதும் உண்டு!). நானும் பேனாப் பிடித்து எழுதுகிறவன் என்று ஆன பின்பு முகவரியை வைத்து அரசியல் செய்யும் ஆளாக இருக்கக் கூடாது என்பதில் தெளிவாகத்தான் இருக்கிறேன். ஆனால், அவர்களுடைய எழுத்துக்கள் என்னை நிறையப் பாதித்திருக்கின்றன. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமானால், அவர்களின் எழுத்துக்களை விட எழுத்தாளர் என்கிற அவர்களின் அடையாளம் என் இளமைக்காலத்தை நிறையச் செதுக்கியது என்பதை என்றும் மறுக்க முடியாது. ஒவ்வொர...