இடுகைகள்

ஆகஸ்ட், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முடிவிலா உருள் (Infinite Scroll)

‘முடிவிலா உருள்’ (Infinite Scroll) கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம்? இல்லை? அது என்ன தெரியுமா? உங்களுக்குத் தெரியும். ஒன்று உங்களுக்கு அதைப் பற்றி நன்றாகத் தெரியும், அல்லது அது என்னவென்று தெரியும், ஆனால் அதைப் பற்றி ஒருபோதும் உணர்ந்திருக்க மாட்டீர்கள் அல்லது அதன் மீது கவனம் செலுத்தியிருக்க மாட்டீர்கள். ஆம். பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற உங்களுக்குப் பிடித்த அனைத்துச் சமூக ஊடகத் தளங்களிலும் உங்களை முடிவில்லாமல் உருட்டிக்கொண்டே இருக்க வைப்பது எது தெரியுமா? அது ஒரு பெரும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு. வலைப்பக்கங்கள் உருவாக்கும் மென்பொருள் பொறியாளர்கள் பயன்படுத்தும் ஒரு வடிவமைப்பு நுட்பம் (design technique).  நீங்கள் சமூக ஊடகங்களுக்கு முந்தைய காலத்தில் இணையத்தைப் பயன்படுத்தியவர் என்றால், அந்த நாட்களில் வலைத்தளங்கள் எப்படி இருந்தன என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள், அந்த வேறுபாடு உங்களுக்கே புரியும். அப்போது இணையத்தில் வலைத்தளங்கள் இருந்தன, அத்தகைய ஒவ்வொரு தளத்திற்குள்ளும் வலைப்பக்கங்கள் இருந்தன. முதல் பக்கத்தில் உள்ள உள்ளடக்கத்தைப் பார்த்துவிட்டு, அடுத்த பக்கத்தில் என்ன இருக்கிறது எ